மாட்சிமை தங்கியப் பேரரசரின் உத்தரவுக்கு இணங்க, அனைத்து நடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு விருப்பமான பிரதமர் வேட்பாளரைக் குறிப்பிட்டு வாக்களிக்கும் செயல்முறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று இஸ்தானா நெகாராவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு வரவில்லை.
நேற்று, இஸ்மாயில் சப்ரி யாகோப்பை ஆதரிக்கும் தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கக் கட்சிகள் இஸ்தானா நெகாராவுக்கு அழைக்கப்பட்டதாகக் கூறின.
அம்னோ துணைத் தலைவர், 114 எம்.பி.க்களால் ஆதரிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு 105 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காத ஒரே ஒரு எம்.பி. தெங்கு இரஸாலிக் என்று நம்பப்படுகிறது.
இஸ்மாயில் சப்ரிக்கான எம்.பி.க்களின் ஆதரவை உறுதி செய்வதற்காக, அகோங் இன்று “வெற்றி” பெற்ற தரப்பை இஸ்தானா நெகாராவுக்கு அழைத்ததாகத் தெரிகிறது. இஸ்மாயிலை ஆதரிக்கும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மாமன்னர் கட்சி வாரியாகத் தொடர் கூட்டங்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஏபி, பாங்கி எம்.பி ஓங் கியான் மிங் இந்தச் செயல்பாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
“யாராவது ஆச்சரியப்படுகிறார்களா என்றால், இல்லை, எனக்கும் என் நண்பர்களுக்கும் (எதிர்க்கட்சியில்) இன்று அரண்மனைக்குச் செல்ல எந்த அழைப்பும் வரவில்லை,” என்று அவர் கீச்சகத்தில் கூறினார்.
மலேசியாகினியிடம் பேசிய பல பிகேஆர் எம்.பி.க்களும் அரண்மனையில் இருந்து அழைப்பு வரவில்லை என்பதை உறுதி செய்தனர்.