மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு புதிய பிரதமர் அறிவிக்கப்படலாம்

மாட்சிமை தங்கியப் பேரரசர், சுல்தான் அல்-அப்துல்லா அல்-முஸ்தபா ரியாத்துதீன் பில்லா ஷா, இன்று மலாய் ஆட்சியாளர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பை நடத்திய பிறகு, புதிய பிரதமரை நியமிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, ஒன்பது சுல்தான்கள் அடங்கிய சிறப்பு கூட்டத்திற்கு மாமன்னர் தலைமையேற்பார்.

எம்.பி.க்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்ததை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை பதவி விலகிய முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நடந்தால், இஸ்மாயில் சப்ரியின் நியமனம், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அம்னோ பிரதமர் பதவியை மீண்டும் கைப்பற்றுகிறது என்று பொருள்படும்.

அம்னோவின் எதிர் தரப்பிலிருந்து, முஹைதீனின் துணைத் தலைவராக இருந்த இஸ்மாயில் சப்ரி, முஹைதீனின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று மிகவும் பிரபலமான வேட்பாளராக உருவெடுத்தார்.

61 வயதான அந்த எம்.பி.க்கு, 220 எம்.பி.க்களில் 114 பேரின் ஆதரவு உள்ளது என்று பொந்தியான் அம்னோ எம்.பி. அகமது மஸ்லான் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறந்த பிறகு, பிரதிநிதிகள் சபையில் இரண்டு காலி இடங்கள் உள்ளன, தொற்றின் காரணமாக இடைத்தேர்தலை நடத்த முடியவில்லை.

தற்போது இடைக்காலப் பிரதமராக இருக்கும் முஹைதீன், புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலும் ஈடுபடாதவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இஸ்மாயில் சப்ரிக்கு அவரது கூட்டணி ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.

2018-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு, பல அம்னோ எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது, இதில் கட்சித் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட பலர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இருவரும் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.

– ராய்ட்டர்ஸ்