14-வது நாடாளுமன்றத்தின், நான்காவது காலக் கூட்டம், திட்டமிட்டபடி செப்டம்பர் 6-ஆம் தேதி, அட்டவணையின்படி நடைபெறும்.
முன்னதாக, மாட்சிமை தங்கியப் பேரரசர், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, புதியப் பிரதமர், மக்களவையில் நம்பிக்கை பிரேரணையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
“இதுவரை எந்த மாற்ற அறிவிப்பும் இல்லை, புதிய அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
“மன்றத் தலைவரிடமிருந்து மாற்றம் இருந்தால், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஓர் அறிவிப்பை வெளியிடுவார்,” என்று பிரதிநிதிகள் சபையின் துணை சபாநாயகர் மொஹமட் ரஷித் ஹஸ்னான் கூறினார்.
அல்-சுல்தான் அப்துல்லா, இஸ்மாயில் சப்ரியின் நியமனத்தைக் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 40 (2) (a) மற்றும் பிரிவு 43 (2) (a)-இன் படி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டக் கூட்ட அட்டவணை மற்றும் ஒழுங்கின்படி, 14-வது நாடாளுமன்றத்தின் நான்காவது காலக் கூட்டம் செப்டம்பர் 6 முதல் 30 வரை நடைபெறும்.