தேசியப் புனர்வாழ்வு மன்றம் மற்றும் கோவிட் -19 தொற்றைக் கையாளும் சிறப்பு குழுவில் இணைய, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் விடுத்த அழைப்பை ஏற்கத் தயார் என்று பிகேஆர் இன்று கூறியது.
இருப்பினும், இறுதி நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன், அவர்கள் முன்மொழிவின் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று பிகேஆர் தகவல்தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
“கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க, பொருளாதாரத்தைப் புத்துயிர் பெறச் செய்ய மற்றும் மக்களை முழுமையாகக் காப்பாற்ற, அரசுடன் அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் என்ற மாமன்னரின் குறிக்கோளை உறுதி செய்வதே இதன் நோக்கம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
தற்போதையக் கோவிட் -19 தொற்றுநோய் நெருக்கடியை நிர்வகிக்க்க, அந்த இரு அமைப்புகளிலும் இணைய எதிர்க்கட்சிகளுக்கு இஸ்மாயில் சப்ரி விடுத்த அழைப்பு குறித்து கருத்து கேட்டபோது ஃபஹ்மி இவ்வாறு கூறினார்.
ஆகஸ்ட் 22 அன்று, பிரதமராக தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், தேசியப் புனர்வாழ்வு மன்றம் மற்றும் கோவிட் -19 தொற்றைக் கையாலும் சிறப்பு குழு ஆகியவற்றில் பங்கேற்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்கலாம் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
விரைவில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமைச் சந்திக்க பிரதமர் விரும்புவதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான ஃபஹ்மி கூறினார்.
அச்சந்திப்பில், இந்த முயற்சியில் எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு உட்பட, பல விஷயங்கள் பேசப்படலாம், எங்களுக்கு விரிவான தகவல்கள் கிடைக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
“அதன் பிறகு, எதிர்க்கட்சி நிச்சயமாக ஒரு கலந்துரையாடலை நடத்தும், இந்த முன்மொழிவு அல்லது அழைப்பின் மீது ஒரு நிலைப்பாடு எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பிரதமரின் அழைப்பை ஏற்க தங்கள் கட்சி தயாராக இருப்பதாக கூறினார்.
அப்படியிருந்தும், லிம் இந்தச் சலுகை அந்தக் குறிக்கோளுக்கு அர்த்தப்பட வேண்டும், புத்ராஜெயாவின் முடிவை மட்டும் அனுமதிக்கக்கூடாது என்றார்.