300 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளுக்கு, நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதனை நிராகரித்ததாகவும் சுகாதார அமைச்சு (கே.கே.எம்.) தெரிவித்தது,
வாய்ப்பு வழங்கப்பட்ட 85 பேர் அதை நிராகரித்ததாகவும், பணியிட மாற்றம் காரணமாக 15 பேர் இராஜினாமா செய்ததாகவும் கே.கே.எம். தலைமைச் செயலாளர் முகமட் ஷஃபிக் அப்துல்லா கூறினார்.
கே.கே.எம். இந்த விஷயத்தைத் தீவிரமாகக் கருதுகிறது, ஒப்பந்த மருத்துவர்கள் அவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேன்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள நிலையில், நிரந்தர நியமனங்களுக்கான வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.
“இந்த விஷயத்தில், நிரந்தர நியமனத்தை நிராகரிக்கும் அதிகாரிகளுக்கு இரண்டாவது நிரந்தர நியமனச் சலுகை இனி வழங்கப்படாது. தங்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டுமெனக் காத்திருக்கும் மற்ற அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, கொடுக்கப்பட்ட 300 வாய்ப்புகளில், 150 அதிகாரிகளுக்குச் சபாவிலும், மேலும் 150 அதிகாரிகளுக்குச் சரவாக்கிலும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
ஒப்பந்த டாக்டர்களின் ஹர்த்தால் இயக்கம், கடந்த மாதம் முதல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, ஜூலை 26-ம் தேது நாடு தழுவிய நிலையில் ஹர்த்தால் நடத்தப்படுகிறது.
வேலை பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் நிச்சயமற்ற தொழில் வாய்ப்புகள் என, 2016-இல் தொடங்கப்பட்ட ஒப்பந்த அமைப்பில் உள்ள பலவீனங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்த இயக்கம் கோரியது.