என்ஜிஓ : நிறுவனம் அமைத்து பகாங் மாநில பூங்காவைப் பராமரிப்பது ‘பாதுகாப்புக்கு  அச்சுறுத்தலாகலாம்’

மாநிலச் சட்டசபையில், நேற்று நிறைவேற்றப்பட்ட பகாங் மாநிலப் பூங்காக்கள் நிறுவனச் சட்டம், மாநிலத்தில் உள்ள பல்லுயிர் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளை அச்சுறுத்தும் ஆபத்து இருப்பதாகச் சுற்றுச்சூழல் அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ), மலேசிய இயற்கை ஆர்வலர்கள் சங்கம் (எம்என்எஸ்) தெரிவித்துள்ளது.

இது மாநிலப் பூங்காக்கள் வணிக மயமாக்கலை நோக்கி செல்வதைக் குறிக்கிறது என்று பஹாங் எம்என்எஸ் தலைவர், நூர் ஜெஹான் அபு பக்காரின் சொன்னார்.

“இது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் நீர் பூங்காக்களை நிலைநிறுத்த முடியாத வளர்ச்சி மற்றும் அதன் வளங்களைச் சுரண்டுவதற்கான ஆபத்துகளை உருவாக்கும்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இந்தச் சட்டம், பகாங் மாநிலப் பூங்காக்கள் நிறுவனத்திற்குப் பரந்த அதிகாரங்களைக் கொடுக்கக்கூடியது, பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும் அதில் தெளிவுபடுத்தவில்லை.

சட்டத்தின் பிரிவு VI, எந்தெந்தப் பகுதிகள் மாநிலப் பூங்கா பிரிவில் சேர்க்கப்படும் அல்லது சேர்க்கப்படாது, மேலும் பஹாங் மாநிலப் பூங்கா கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்படும் என்று அதிகாரிகள் அவ்வப்போது முடிவெடுப்பார்கள் என்று கூறுகிறது.

பழங்குடியினர் மற்றும் உள்ளூர் சமூகம் மாநிலப் பூங்காவில் உள்ள வளங்களை அணுகுவதற்கான ஏற்பாட்டையும் அதில் குறிப்பிடவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

அதற்காகதான், பஹாங்கில் உள்ள மாநிலப் பூங்காக்களை அடையாளம் காணவும், பாதுகாக்கவும் மற்றும் ஊக்குவிக்கவும் பஹாங் மாநிலப் பூங்காக்கள் கழகம் பொறுப்பேற்றுள்ளது.

இதன் பொருள், “பஹாங் மாநில பூங்காக்களை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிக்குவதற்கும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடலாம்” மற்றும் “பூங்காவை மேம்படுத்த விரும்பும் தரப்பினருக்கு எந்த வடிவத்திலும் உதவிகள் வழங்கலாம்”.

“எந்தவொரு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையிலும் ஈடுபடலாம், மேலும் அது பொருத்தமானதாகக் கருதும் எந்தத் தரப்பினருடனும் கலந்தாலோசிக்கலாம்”.

இந்த நிறுவனத்திற்குப் பஹாங் மாநிலப் பூங்காக்கள் ஒருங்கிணைப்பு நிதியால் நிதியளிக்கப்படும்.

சட்டத்தின்படி, மாநில அரசு ஒதுக்கீடுகள், நிறுவனத் திட்டங்கள் அல்லது குத்தகைகளில் பெறப்படும் வருமானம் அல்லது பிறக் கொடுப்பனவுகளிலிருந்தும் நிதி திரட்டப்படுகிறது.

பஹாங் மலேசியத் தீபகற்பத்தில் மிகப்பெரிய மழைக்காடுகளைக் கொண்டுள்ளது, இது பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் காட்டு விலங்குகளின் வாழ்விடமாகும்.

இருப்பினும், காட்டு மரங்களை வெட்டுதல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக இதன் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​உலு ஜெலாய் நிரந்தர வனப்பகுதியான போஸ் லானையில் உள்ள பூர்வக் குடிமக்கள், தங்கள் குடியேற்றத்திற்கு அருகில் – 924 கால்பந்து மைதானங்களின் பரப்பளவை உள்ளடக்கிய – லாந்தனைடு அரிய மண் சுரங்கம் முன்மொழியப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுரங்கத்திற்கு முன்மொழியப்பட்ட பகுதி 622 ஹெக்டேர், போஸ் லானையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மார்ச் மாதத்தில், ஆராஸ் குவாசா சென். பெர். நிறுவனம், இந்தத் திட்டத்திற்காக முன்மொழிந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான விதிமுறைகளைச், சுற்றுச்சூழல் துறை நிராகரித்தது.

நேற்று, பஹாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், இந்தத் திட்டத்திற்காக ஒரு சுரங்க குத்தகை வழங்கப்பட்டுள்ளது என்றத் தகவலை மறுத்தார்.