நாளை தொடங்கி, செப்டம்பர் 8 வரை, ரோன்95, ரோன்97 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் முறையே RM2.05, RM2.72 மற்றும் RM2.15 ஆக இருக்கும்.
தானியங்கி விலை பொறிமுறையைப் (ஏபிஎம்) பயன்படுத்தி, வாராந்திர அடிப்படையில் பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று நிதி அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் ரோன்95 மற்றும் டீசலின் உச்சவரம்பு விலையை நிர்ணயித்து, இரு பொருட்களின் உண்மையான சந்தை விலைகள் அதிகரித்திருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலையை விட அதிகமாக உள்ளது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் உலகக் கச்சா எண்ணெய் விலை போக்குகளைத் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சு கூறியது.