65.1 விழுக்காடு மக்கள் இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளை முடித்துள்ளனர் – ஜே.கே.ஜே.ஏ.வி

மலேசியாவில், மொத்த மக்கள்தொகையில் 65.1 விழுக்காடு அல்லது 15,241,655 தனிநபர்கள், நேற்றைய நிலவரப்படி இரண்டு மருந்தளவு கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் சிறப்பு குழு (ஜே.கே.ஜே.ஏ.வி.) தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 19,932,137 பேர் அல்லது 85.1 விழுக்காட்டினர் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், இதனால் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டம் (பிக்) மூலம் தற்போது 35,150,474 தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கிடைத்துள்ளது என்று ஜே.கே.ஜே.ஏ.வி. அதன் அதிகாரப்பூர்வக் கீச்சகப் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளது.

ஜே.கே.ஜே.ஏ.வி.-யின் கூற்றுபடி, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 61 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், 46.7 விழுக்காட்டினர் முழுஅளவு தடுப்பூசியை முடித்துள்ளனர்.

பிப்ரவரி 24-ம் தேதி, நாடு முழுவதும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தடுப்பூசிகளை வழங்கும் ‘பிக்’ திட்டம் தொடங்கப்பட்டது.

  • பெர்னாமா