இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில், 310,074 குழந்தைகளும் 17 வயதிற்குட்பட்ட இளையர்களும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு (கே.கே.எம்.) தெரிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கை 2020-ல் பதிவான எண்ணிக்கையை விட, 24 மடங்கு அதிகமாகும். கடந்தாண்டு, 12,620 நேர்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
நேற்று, கே.கே.எம். வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் 31 வரையில், 106 ஆரம்பப் பள்ளி குழந்தைகள் (7 முதல் 12 வயது வரை) உட்பட, 823 நேர்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்தாண்டு, அந்த வயதினரை உட்படுத்திய 4,071 நேர்வுகள் மட்டுமே பதிவாகின.
13 முதல் 17 வயதுடையவர்கள், 89,087 நேர்வுகளுடன் இரண்டாவது மிக உயர்ந்த குழுவினர் ஆவர், கடந்தாண்டு 4,142 நேர்வுகளுடன் ஒப்பிடும்போது.
கூடுதலாக, இளையர்கள் சம்பந்தப்பட்ட கோவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டு ஆறு இறப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 41 இளையர்கள் மரணமடைந்துள்ளனர்.
இளையர்கள் மத்தியில் இதுவரை 16 இறப்புகள் பதிவாகியுள்ளன, அவர்களைத் தொடர்ந்து பிறந்த குழந்தைகள் முதல் நான்கு வயது வரையிலான 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இளையர்கள், குறிப்பாக 7 முதல் 12 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியில், நேர்வுகள் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து, கருத்து தெரிவிக்குமாறு மலேசியாகினி கே.கே.எம்.-ஐ கேட்டுக் கொண்டது.
பிப்ரவரியில் தொடங்கிய தடுப்பூசி செயல்முறை, கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையில் தீவிரக் குறைப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களால் இன்னும் தடுப்பூசி போடப்படாத 18 வயதுக்குட்பட்ட இளையர்களும் குழந்தைகளும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.