தடுப்பூசிகள் ‘லோங் கோவிட்’ அறிகுறிகளிலிருந்து பாதுகாக்கிறது – ஆய்வு

தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளைப் பெற்றவர்கள், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டாலும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களைப் போல, தொற்றின் நீண்டகால விளைவுகளை அனுபவிக்க வாய்ப்பில்லை.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தொற்றுநோயின் ஆபத்து குறையலாம்.

“நோய்த்தொற்றுக்குப் பிறகு (கோவிட் -19) 28 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்பு உண்டு, இது இரண்டு தடுப்பூசி மருந்தளவுகள் பெற்றவர்களுக்கு பாதியாகக் குறைவதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று தி லான்செட் தொற்று நோய்கள் (The Lancet Infectious Diseases) வெளியிட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கோவிட் -19 அறிகுறி கண்டறிதல் பயன்பாட்டின் பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவை, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர், பயனர்கள் அந்தப் பட்டியலிடப்பட்ட 32 கோவிட் -19 அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவிக்கிறார்களா என்பதைத் தினசரி அடிப்படையில் தெரிவிக்கும்படி ஊக்குவிக்கப்பட்டது.

‘லோங் கோவிட்’ ஆபத்து கிட்டத்தட்ட பாதியாக குறையும்

பிற பயனர்களின் மக்கள்தொகை தகவல், கோவிட் -19 சோதனை முடிவுகள், தடுப்பூசி நிலை மற்றும் சுகாதாரத் தகவல் போன்ற தரவுகளைச் சேகரிக்கவும் இந்தப் பயன்பாடு பயன்படுத்தப்படுகிறது.

 

சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தடுப்பூசி போடப்படாதவர்களுடன் ஒப்பிடும்போது 49 விழுக்காடு குறைந்துள்ளதாக அது கூறியது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் காட்டாது, அதே நேரத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அறிகுறிகளை உருவாக்குகிறார்கள், அதிலும் மிகக் குறைவானவர்களுக்குதான் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது.

இருப்பினும், அந்த ஆய்வு ஒரு ‘லோங் கோவிட்’ அறிகுறிக்கான பதிலைத் தெரிவிக்கவில்லை.

கோவிட் -19 தொற்றின் எந்த மாறுபாடு உள்ளது என்பதையும் அது குறிப்பிடவில்லை.

இந்த ஆய்வு கடந்த ஆண்டு டிசம்பர் 8 முதல் இந்த ஆண்டு ஜூலை 4 வரை ஏற்பட்ட கோவிட் -19 நோய்த்தொற்றுகளை உள்ளடக்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டெல்டா மாறுபாடு தோன்றுவதற்கு முன்பு, ஆல்பா மாறுபாடு ஆரம்பத்தில் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தியபோது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பைச் அதிகரிக்கும், ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை

லண்டன் இம்பீரியல் கல்லூரியால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தடுப்பூசி அறிகுறியற்ற நோய்த்தொற்றுகள் உட்பட, எளிதில் பாதிக்கப்பட்ட டெல்டா வகைகளில் இருந்து தொற்றுநோய்க்கான ஆபத்தைச் சுமார் 50 முதல் 60 விழுக்காடு வரை குறைத்துள்ளது.

அத்தகைய பாதுகாப்போடு, ஜூலை மாதத்தில் இஸ்ரேலிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், முழுமையான தடுப்பூசி பெற்றவர்கள் இன்னும் கோவிட் -19 தொற்றின் நீண்டகால விளைவுகளைப் பெற முடியும் என்று கண்டறிந்தனர்.

மருத்துவமனை ஊழியர்களிடையே உள்ள 39 நேர்வுகளில், 7 நீடித்த அறிகுறிகளைப் புகாரளித்தன, இதில் வாசனை உணர்வு இழப்பு, தொடர்ச்சியான இருமல், சோர்வு, பலவீனமாக உணருதல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தசை வலி ஆகிய அறிகுறிகள் அடங்கும்.

அவர்களில் 9 பேர் தனிமைப்படுத்தலுக்குத் தேவையான 10 நாட்களுக்கு மேல் வேலையில் இருந்து விடுப்பு எடுத்தனர், அவர்களில் 4 பேர் இரண்டு வாரங்களுக்குள் வேலைக்குத் திரும்பினர். மற்றொருவர் ஆறு வாரங்களுக்குப் பிறகும் வேலைக்குத் திரும்பவில்லை.

இந்த ஆய்வு, முழு தடுப்பூசி பெறும் நபர்களிடையே கோவிட்டின் நீண்ட கால விளைவுகள் குறித்த கல்வி ஆய்வுகளில் சில ஆரம்ப நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது.

இங்கிலாந்தின் சமீபத்திய ஆய்வுக்கு மாறாக, தடுப்பூசி லோங் கோவிட் ஆபத்தைக் குறைக்க முடியுமா என்பதை இஸ்ரேலிய ஆய்வால் மதிப்பிட முடியவில்லை.