ஆகஸ்ட் 28-ம் தேதி, பேராக், ஈப்போவைச் சார்ந்த பாதுகாவலர் தவ சகாயம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உறுதியளித்தார்.
“தவ சகாயம் குடும்பத்திற்கு ஏற்பட்ட துயரம், என்னை வருந்தச் செய்தது, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
“சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் விலக்களிக்கப்படவில்லை. உங்கள் அக்கறைக்கு நன்றி, மாண்புமிகு அவர்களே,” என்று இஸ்மாயில் சப்ரி தனது கீச்சகத்தில் கீச் செய்தார்.
பாதுகாவலரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளை வலியுறுத்தி, சமூக ஊடகங்களில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரனின் பதிவுக்கு இஸ்மாயில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இன்று, இஸ்மாயில் சப்ரி தவ சகாயத்தின் மனைவி இ பிலோமினாவைத் தொடர்பு கொள்ள முயன்றதை குலசேகரன் வெளிப்படுத்தினார்.
இஸ்மாயில் சப்ரி, தவ சகாயத்தின் உறவினருடன் இன்று பேசினார்.
“அவர் (இஸ்மாயில் சப்ரி) மலேசியர்களில் பெரும்பாலானோரின் உணர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தினார்,” என்று குலசேகரன் கூறினார்.
இந்த விஷயத்தில் அக்கறை காட்டிய குலசேகரனுக்கு, இஸ்மாயில் சப்ரி நன்றி தெரிவித்தார்.
டிசம்பர் 29, 2020-ல், தவ சகாயம், 64, ஈப்போ ஜாலான் யாங் கல்சோமில், ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விருந்தினரால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
பேராக் காவல்துறைத் தலைவர் மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹித்தின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் டிசம்பர் 29, 2020 அன்று நடந்தது, காவல்துறை குற்றவியல் சட்டம் பிரிவு 326-இன் கீழ் விசாரணையைத் தொடங்கியது.
பாதிக்கப்பட்டவர் ஆகஸ்ட் 28-ம் தேதி, அவரது வீட்டில் இறந்துவிட்டதாகவும், இராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனையின் முடிவில், பாதிக்கப்பட்டவரின் இறப்பு நுரையீரலில் பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்டது என்பதை உறுதி செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர், நூர் அசார் என அடையாளம் காணப்பட்டவர் மீது ஜனவரி 6-ஆம் தேதி, குற்றவியல் சட்டம் பிரிவு 335-இன் கீழ், ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது, செப்டம்பர் 9-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.