பள்ளி அமர்வை நேருக்கு நேர் திறப்பதில், அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்று அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கல்வி அமைச்சை வலியுறுத்தினார்.
பல விஷயங்களை ஆழமாக செம்மைப்படுத்த வேண்டும், பள்ளி அமர்வை திறப்பதற்கான புதிய தேதி துல்லியமாகவும் சரியானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
“அதிகக் கோவிட் -19 தொற்று விகிதத்தைப் பொருட்படுத்தாமல், நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள் அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறும்.
“நமக்கு உறுதியாகத் தெரியாத, ஓர் ஆபத்தான முடிவை ஒருபோதும் எடுக்காதீர்கள். மீண்டும் அவசரப்படத் தேவையில்லை, பழைய தவறுகளைத் தவிர்க்க முயலுங்கள்.
“பல விஷயங்களை ஆழமாகச் செம்மைப்படுத்த வேண்டும், ஏனென்றால் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் கோவிட் -19 தடுப்பூசி போடப்படவில்லை,” என்று அவர் இன்று காலை ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
பள்ளி அமர்வுகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கும் என்று மூத்தக் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் நேற்று வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
செப்டம்பர் 1-ஆக இருந்த முந்தைய தேதி அக்டோபர் 3 என நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும், தேசிய மீட்பு திட்டத்தின் (பிபிஎன்) முதல் கட்டத்தில் இருக்கும் மாநிலங்களை இந்த அமர்வு உள்ளடக்காது என்று ராட்ஸி விளக்கினார்.
மாணவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அகமது ஜாஹித் கூறினார்.
“எஸ்ஓபி மிகவும் இறுக்கமாக இருந்தாலும், மாணவர்களைப் பாதுகாப்பதில் அது எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
“ஏப்ரல் 26, 2021-ல், 12 வயதிற்குட்பட்ட 23,739 மாணவர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளைச் சுகாதார ஆபத்தில் வைக்க தயாராக இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
“எஸ்ஓபி-யில் முழுமையான நம்பிக்கை இல்லையென்றால், பலர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கலாம். இறுதியில், அவர்கள் கல்வி பிரச்சினைக்குத் திரும்புவார்கள்.
“எனவே, இந்த அக்டோபர் மாதம், நமது குழந்தைகளுக்காகப் பள்ளிகளைத் தொடங்கும் முடிவில், அடுத்தகட்ட நடவடிக்கைகளும் துல்லியமானவையாக சரியானவையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
“சிறந்த முடிவுகளை எடுப்பதற்காக, கடந்த கால அனுபவத்தைப் பயன்படுத்துங்கள்,” என்று அவர் கூறினார்.