புவாட் : முஹைதீனின் தோல்வியடைந்த பிம்பம் இஸ்மாயில் சப்ரி அரசை வேட்டையாடும்

அம்னோ உச்சமன்ற (எம்டி) உறுப்பினர் புவாட் ஸர்காஷி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான நிர்வாகம், தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கமாக இருக்கலாம் என்றக் குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, “அசல் திரும்பியதன் விளைவு,” என்று கூறினார்.

முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினைத் தேசியப் புனர்வாழ்வு மன்றத்தின் (எம்.பி.என்.) தலைவராக எப்படி நியமிக்க முடியும் என்று புவாட் கேள்வி எழுப்பினார்.

இந்த நியமனம் இஸ்மாயில் சப்ரியால் தானாக முன்வந்து செய்யப்பட்டதா அல்லது முஹைதீனால் இயக்கப்பட்டதா என்பதுதான் கேள்வி.

முஹைதீன் எப்படி நியமிக்கப்பட்டார்? அவர் இஸ்மாயில் சப்ரிக்கு அழுத்தம் கொடுத்தாரா? அல்லது இஸ்மாயில் சப்ரி தானாக முன்வந்து, முஹைதீன் தோல்வியுற்ற பிரதமர் அல்ல என்று நம்பியதால் அவரை நியமித்தாரா?

பெர்சத்து ஆதரவின் நிபந்தனைகளின் காரணமாகக் கட்டாயப்படுத்தப்பட்டால், இஸ்மாயில் பிரதமராக இருப்பார், ஆனால் ஒருவர் “கட்டுப்பாட்டில்” இருப்பார், மேலும் இது தே.கூ. 2.0 அரசாக இருக்கும்

“எம்.பி.என்.-னுக்குப் பெரிய அதிகார வரம்பு உள்ளதா?

“கண்டிப்பாக ஒரு ‘வரையரை நியதி’ இருக்கும், அது இன்னும் ‘அதிகாரப்பூர்வமாக’ இருக்கும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

அப்படி நடந்தால், இஸ்மாயில் சப்ரிக்கு ஒரு பிரதமராக நாட்டை நிர்வகிக்கும் சுதந்திரம் இல்லை என்று அவர் கூறினார்.

நிலைத்தன்மையை உருவாக்க முடியாது என்று அவர் கூறினார். மாறாக, அரசியல் பொம்மைகளின் நடைமுறை தொடரும்.

நேற்று முந்தினம், அமைச்சரவை செயலாளரான அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் ஸூகி அலி, முஹைதீன் அமைச்சக அளவில் எம்.பி.என்.-இன் தலைவராக நியமிக்கப்பட்டதாக அறிவித்தார்.

“இந்த நியமனம் பெர்சத்து கட்சியைக் காப்பாற்றியது. கட்சி மீண்டும் ஆட்சியில் வலுவாக உள்ளது. பெர்சத்து 15-வது பொதுத் தேர்தலுக்கான இடப் பங்கீட்டில் அம்னோவிடம் பேரம் பேச இடம் உள்ளது.

“இது ஒரு பிரச்சினை. முஹைதீனின் தோல்வியடைந்த பிம்பம் 9-வது பிரதமரின் புதிய அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் என்பது இப்போது பெரிய பிரச்சினை.

“அம்னோ உச்சமன்றம் எச்சரிக்கிறது, தே.கூ. 2.0 அரசாங்கத்தின் பிம்பத்தை இயக்க வேண்டாம்,” என்று புவாட் கூறினார்.