மலாக்காவின் முன்னாள் முதல்வர் அட்லி ஸாஹரி, அமானாவின் புதிய உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முகமது சாபு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியாக இருந்த ஹுஸாம் மூசாவின் பதவியை நிரப்புவற்காக இந்த நியமனம் என்று மொஹமட் கூறினார்.
அட்லியின் நியமனம், எதிர்காலத்தில் கட்சியையும் நாட்டையும் வழிநடத்த அதிக வாரிசு தலைவர்களைக் கொண்டுவரும் அமானாவின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளது.
“இந்த இலக்குக்கு இணங்க, அட்லிக்குப் பதிலாக அமானா பொருளாளர் பதவிக்கு, சிலாங்கூர் மாநிலத் தலைவர் இஷாம் ஹாஷிம், 59, நியமிக்கப்பட்டுள்ளார்.
“இந்த நியமனம் சமூகத்தின் மத்தியில், அமானாவின் பிம்பத்தை மேலும் வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
புக்கிட் கத்தில் சட்டமன்ற உறுப்பினரான அட்லி, மலாக்கா அமானாவின் தலைவரும் ஆவார்.
கடந்த ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி, ஹுஸாம் கட்சியின் உதவித் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததை அமானா உறுதிப்படுத்தியது.
முன்னதாக, அவரது செயல்களால் கட்சித் தலைவருடன் விரிசலில் இருந்து வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஹுஸம் மறுத்தார்.