கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,352 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மற்ற மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் புதிய நேர்வுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
மேலும், இன்று 272 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 18,491– ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 20,201 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 435 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சரவாக் – 3,714 (134,612), சிலாங்கூர் – 2,126 (625,179), ஜொகூர் – 2,101 (151,459), சபா – 1,844 (161,265), கெடா – 1,599 (109,067), பினாங்கு – 1,558 (96,656), கிளந்தான் – 1,213 (85,358), பேராக் – 1,082 (74,960), திரெங்கானு – 700 (37,683), பஹாங் – 463 (47,365), கோலாலம்பூர் – 398 (176,989), மலாக்கா – 295 (50,765), நெகிரி செம்பிலான் – 193 (93,042), பெர்லிஸ் – 38 (2,372), புத்ராஜெயா – 23 (5,576), லாபுவான் – 5 (9,839).