கவிதா கருணாநிதி – கோவிட்-19 பெரும்பாலோரின் மத்தியில் நுகர்வுத் தன்மையைச் செயலிழக்க (Anosmia) செய்கின்றது. மற்ற அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் இருமுபவளைக் காட்டிலும் நுகர்வுத் தன்மையின் செயலிழப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது என்கிறார் சாபீர். அவர் கட்டுரையின் சாரம் வருமாறு.
மேலும், நுகர்வுத் தன்மையோடு சுவையின் தன்மையும் செயலிழந்துவிடும். யுனைடெட் கிங்டம் தேசியச் சுகாதாரத் துறை காய்ச்சல், இருமுபவள், நுகர்வு மற்றும் சுவையின் தன்மை இழப்பு முக்கிய கோவிட்டின் அறிகுறிகள் என்று கருதுகிறது. இவ்வறிகுறிகளில் நுகர்வுத் தன்மையின் செயலிழப்பைப் பெரும்பாலோர் எதிர்நோக்குகின்றனர்.
கோவிட்டால் நுகர்வு மற்றும் சுவை தன்மையின் இழப்பு வயதான நோயாளிகளுடன் ஒப்பிடும்போது இளைய நபர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், சில ஆய்வுகள் அதிகப் பிஎம்ஐ(BMI) கொண்ட இளம் பெண்களுக்கு இந்த நிலை சற்று அதிகமாகவே உள்ளதாகக் குறிப்பிடுகின்றன.
காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியான இருமல் போன்ற பிற அறிகுறிகள் இல்லாவிட்டாலும், திடீர் வாசனை அல்லது சுவை இழப்பு இருந்தால் நீங்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு வாசனை இழப்பு சுமார் 2 வாரங்களுக்கு வரை நீடிக்கலாம்.
சாதாரணச் சலி இரும்பல் போன்றவைகளும் மூக்கடைப்பால் நுகர்வு தன்மையைக் குறைத்துவிடும். ஆனால், கோவிட் தாக்கத்தில் இந்த மூக்கடைப்பு இருக்காது.
எனவே, திடீர் நுகர்வு தன்மையை ஏற்பட்டால், அது கோவிட்டின் பாதிப்புதான் என்று கருத வேண்டும். அதற்கேற்ற வகையில் தனிமைப்படுத்திக்கொண்டு உடனடியாகக் கோவிட் டெஸ்ட் செய்வது நல்லது.
மூக்கில் உள்ள ஆல்பெக்டரி நரம்பு (olfactory nerve) கோவிட் வைரசால் பாதிக்கப்படுவதால், மூலையில் பதிவு செய்யப்படும் நுகர்வு தன்மை தடை செய்யப்படுகிறது. அந்தச்சூழலில் ஒருவரால் எதையும் மோப்பம் பிடிக்கவோ நுகரவோ இயலாது.