‘வெளிநாட்டவர்கள் தடுப்பூசி பெறுவதற்குப் பிரதமர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ – எச்.ஆர்.டபிள்யூ.

செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்குவதை அரசாங்கம் ஆதரிக்கிறது என்று உறுதி அளிக்குமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

வெளிநாட்டவர்கள் மீது புகாரளிக்கவோ அல்லது கைது செய்யவோ கூடாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் – எச்.ஆர்.டபிள்யூ) கூறியுள்ளது.

மலேசியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் கோவிட் -19 தடுப்பூசிக்குத் தகுதியுடையவர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனின் ஒருவரின் உத்தரவாதம் வெளிநாட்டினரைச் சமாதானப்படுத்த போதுமானதாக இல்லை என்று அந்தச் சர்வதேச உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

“கைரியின் சமீபத்திய அறிக்கை தடுப்பூசிகளுக்குச் சரியான அணுகலை வரவேற்கிறது.

சட்ட ஆலோசகர் லிண்டா லக்தீர்

“ஆனால் அந்த வார்த்தைகளை நிரூபிக்க அரசாங்கம் செயல்படாத வரை, மலேசியாவில் பல ஆவணமற்ற குடியேறியவர்கள் தடுப்பூசி பெற முன்வந்து, ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இல்லை,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான சட்ட ஆலோசகர் லிண்டா லக்தீர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை, சபாவின் கிழக்கு கடற்கரை மாவட்டமான செம்போர்னாவில் உள்ள புலாவ் லாராபனுக்குச் சென்ற கைரி, அத்தீவில் ​​ஆவணமற்றவர்களும் தடுப்பூசிகளைப் பெறும் முயற்சிகளை ஊக்குவிப்பதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கைரி கூறினார்.

எனினும், தடுப்பூசி பெற முன்வருவது பாதுகாப்பானது என்று கைரி வெளிநாட்டவர்களுக்கு உறுதியளிப்பது இது முதல் முறை அல்ல என்று லக்தீர் கூறினார்.

பிப்ரவரி 2021 இல், அறிவியல் அமைச்சராகவும், மலேசியாவின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், தடுப்பூசி பெற விரும்பும் ஆவணமற்ற குடியேறியவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று கைரி அறிவித்தார்.

“ஆனால், ஜூன் மாதத்தில், உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடின் ஆவணமற்ற தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தபோது அந்த வாக்குறுதி மீறப்பட்டது, மேலும் குடிநுழைவுத் துறை பல சோதனைகளில் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து தடுத்து நிறுத்தியது.

“இதன் விளைவாக, ஆவணமற்ற குடியேறியவர்கள் அரசாங்கத்தின் வாக்குறுதிகளைச் சந்தேகிக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.