முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தனது நீதிமன்ற வழக்கு மற்றும் தனது மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்கக் கோரி, முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினுக்குத் தனது தரப்பு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
முஹைதீனிடம் தனது நீதிமன்ற வழக்கில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், தன் மீது வதந்திகளைப் பரப்புவதற்கும் பொறுப்பேற்று, கருத்துரைக்க முஹைதீனுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டதாக நேற்று ஒரு முகநூல் பதிவில் நஜிப் கூறினார்.
“நீதிமன்றத்தில் ஆதாரம் கொடுக்கும்படி கேட்டபோது, வதந்திகளிலிருந்து தெரிந்துகொண்டதா அவர்கள் பதிலளித்தனர். எந்த ஆதாரமும் இல்லை, கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டது. அவர்கள் எனக்குப் பதில் சொல்ல ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்கலாம்.
“(வழக்கறிஞர் வான் சைபுல் கூறினார்) இது கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் கேட்பதற்கான அவர்களின் சுதந்திர உரிமை. அதுதான் வான் சைபுல் அனுப்பிய பதில் (அனுப்பிய கோரிக்கை கடிதத்திற்கு).
“வழக்கறிஞர் வான் சைபுலின் அதிகாரப்பூர்வப் பதிலைக் குறிப்பிட்டு, என் வழக்கறிஞரும் இதே போன்ற கோரிக்கை கடிதத்தை முஹைதீனுக்கு அனுப்பியுள்ளார் – என்னைப் பற்றிய வதந்திகளுக்கு வான் சைபுல் தெளிவாக பதிலளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தனது நீதிமன்ற வழக்கில் எப்போது, எப்படி தலையிடச் சொல்லி அந்தப் பெர்சத்து தலைவரிடம் தான் கேட்டேன் என்று அவர் விளக்கமளிக்க வேண்டுமென்று நஜிப் சொன்னார்.
ஆகஸ்ட் 4-ம் தேதி, தான் பிரதமராக இருந்தபோது, குற்றவியல் குற்றம் சாட்டப்பட்ட சில தரப்பினர் தங்களை விடுவிப்பதற்காக, நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுமாறு தன்னை வலியுறுத்தியதாகக் கூறினார்.
எனினும், முஹைதீன் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை.