பிரதமரின் சலுகையைப் பற்றி விவாதிக்க பி.எச். உயர் தலைவர்கள் இன்று சந்திப்பு

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் வாக்குறுதியளித்த சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க, பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) உயர்மட்ட தலைவர்கள் இன்று மாலை ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

புதிய அரசாங்கத்துடன் நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் (சி.எஸ்.எ.) கையெழுத்திடுவதா இல்லையா என்பதை, அமர்வின் போது எதிர்க்கட்சி கூட்டணி முடிவு செய்யும் என்று அறியப்படுகிறது.

ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஒரு மெல்லிய விளிம்பில் இப்போது பிரதமராக இருக்கும் இஸ்மாயில் சப்ரிக்கு, அடுத்த நாடாளுமன்ற அமர்வு ஒரு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கும்.

இந்தத் திங்கட்கிழமை தொடங்கவுள்ள மக்களவை கூட்டம், பிரதமராக இஸ்மாயில் சப்ரி இணையும் முதல் கூட்டமாகும்.

பி.எச். உள்ளக ஆதாரங்களின்படி, பி.எச். கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் சி.எஸ்.ஏ. பற்றி விவாதிக்க அரசாங்கப் பிரதிநிதிகளுடன் ஓர் உள்சந்திப்பை நேற்று நடத்தினார்கள்.

இஸ்மாயில் சப்ரி நேற்று உறுதியளித்த ஏழு நாடாளுமன்ற மற்றும் அரசு சீர்திருத்தங்கள் குறித்து, பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு இது நடந்ததாக நம்பப்படுகிறது.

எனினும், கடந்த காலங்களில், பி.எச்.-ஆல் கூறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை உட்பட இறுதி செய்யப்படாத சில சிக்கல்கள் இருப்பதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

“இன்றையக் கூட்டத்தில் பிரதமரின் சலுகை மற்றும் பி.எச். தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு பற்றி விவாதிக்கப்படும் (நேற்று),” என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

அனைத்தும் பரிசீலிக்கப்படுகின்றன

எல்லாம் சரியாக நடந்தால், சிஎஸ்ஏ நாளை கையெழுத்திடப்படும் என்று அவர் கூறினார்.

“பிரதமர் நேற்று வழங்கியதை விட சற்று அதிகரிப்பு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று மற்றொரு ஆதாரம் கூறியது.

இதற்கிடையில், பி.எச். தலைமைச் செயலாளர் சைஃபுட்டின் நசுதியோன் இஸ்மாயில், கூட்டமைப்பின் தலைமை மன்றம் மாலை 5 மணிக்கு கூடி சி.எஸ்.ஏ. பிரச்சனை பற்றி விவாதிக்கவுள்ளதை மலேசியாகினியிடம் உறுதி செய்தார்.

பிகேஆர் பொதுச் செயலாளருமான அவர், நேற்று இஸ்மாயில் சப்ரியின் சலுகையை “சரியானது” என்று கருதினார், ஆனால் அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இருப்பினும், வேறு ஏதேனும் பிரச்சினைகள் விவாதிக்கப்படுகிறதா என்று கேட்டபோது சைஃபுட்டின் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் அரசாங்கமும் ஒப்பந்தத்தின் விவரங்களை இறுதி செய்யவில்லை என்பதை அமானா பொதுச் செயலாளர் டாக்டர் ஹத்தா ரம்லியும் உறுதிப்படுத்தினார்.