கட்டம் 3 மற்றும் 4-இல் உள்ள பள்ளிகள் அக்டோபர் 3-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்

தேசிய மீட்சி திட்டத்தின் (பிபிஎன்) 3 மற்றும் 4-வது கட்டங்களின் கீழ் உள்ள மாநிலங்களில், நேரடி பள்ளி அமர்வுகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி வாராந்திர சுழற்சி முறையில் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்தது.

1 மற்றும் 2-ஆம் கட்டங்களின் கீழ் உள்ள மாநிலங்களில், அரசாங்கத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கபடும்.

கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி ஜிடின், பள்ளி வருகைக்கான இந்தச் சுழற்சி முறை, மாணவர்களின் எண்ணிக்கையில் 50 விழுக்காட்டை மட்டுமே உள்ளடக்கியது.

“வகுப்பில் உள்ள மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள், ஒரு நேரத்தில் ஒரு குழு மட்டுமே பள்ளிக்கு வரும்.

“ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை வரம்பு 50 விழுக்காடு (முழு வகுப்பிலும்) மட்டுமே,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

3-ஆம் கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களில், இடைநிலைப் பள்ளிகளின் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குத் திரும்புவார்கள், பிபிஎன்-இன் 4-வது கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களிலும் இது கடைபிடிக்கப்படும்.

இருப்பினும், வாராந்திர சுழற்சி முறை, மற்றவற்றுடன், உறைவிடப் பள்ளி மாணவர்கள் (எஸ்.பி.பி.), சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் மற்றும் படிவம் 6, தவணை 2 மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு திரும்பாத அனைத்து மாணவர்களுக்கும் இயங்கலை வகுப்புகள் தொடரும்.

இல்லிருப்பு கற்றலில் இருக்க விரும்பும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் ராட்ஸி கூறினார்.