`மலேசியாவில் கோவிட் உயிரிழப்புகள் 9/11 சோகத்தை விட 7 மடங்கு அதிகம்` – கிட் சியாங்

செப்டம்பர் 11 பேரழிவுகரமான சோகத்தின் 20-வது ஆண்டு நிறைவை அமெரிக்கா நினைவுகூர்கிறது.

மலேசியாவைப் பொறுத்தவரை, 21 மாதகால கோவிட் -19 தொற்றுநோய் “9/11 துயரத்தை” விட ஏழு மடங்கு உயிர்களைக் கொன்றது – ‘இந்த தொற்றுநோய் எப்போது முடிவுக்கு வரும்?’ : என்று கேட்க மலேசியர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.

அமெரிக்காவில் 9/11 நிகழ்ந்த சோகத்தில் 3,000 பேர் உயிர் இழந்தனர். இன்று, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கும் போது, ​​கோவிட் -19 காரணமாக மலேசியா 21,000 இறப்புகளை நெருங்குகிறது.

முந்தைய நாள், சுகாதார அமைச்சின் (கே.கே.எம்.) இணையதளமான கோவிட்நவ், கோவிட் -19 காரணமாக 292 இறப்புகளைப் பதிவு செய்தது.

கோவிட் -19 காரணமாக தற்போதுள்ள மரணப் பின்னடைவு தகவலைத் தீர்க்க, கே.கே.எம்.-இன் முயற்சிகள் காரணமாக, அடுத்த சில நாட்களில் “அறிக்கையிடப்பட்ட இறப்புகளின்” அதிகரிப்பை (கே.கே.எம்)  எதிர்பார்க்கலாம் என்று மலேசியர்களிடம் இப்போது சொல்லப்பட்டுள்ளது.

மலேசியர்கள் புதிய தரவுத் தொகுப்பை – “உண்மையான இறப்பு எண்ணிக்கை” – தற்போதைய சூழ்நிலையின் குறிகாட்டியாகக் குறிப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கே.கே.எம்.-இன் விளக்கம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலாவதாக, “அறிக்கை செய்யப்பட்ட இறப்புகளின்” எண்ணிக்கை கோவிட் -19 காரணமாக இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை என்பதை கே.கே.எம். மறுக்கவில்லை.

இரண்டாவதாக, மலேசியர்களுக்குக் கோவிட் -19 தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக எவ்வளவு காலம் வழங்கினார்கள் – ஒரு மாத காலம், இரண்டு அல்லது மூன்று மாதங்கள்?

மூன்றாவதாக, நேற்றைய முன்தினம் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை, கோவிட்நவ் வலைத்தளத்தில் அதிகாலை 1:30 மணிக்கும், வேர்ல்டோமீட்டர் இணையதளத்தில் மாலை 4 மணிக்கும், மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட 106 இறப்புகள் (BID) உட்பட 592 இறப்புகள் இருப்பதைக் காட்டியது.

இந்த இறப்புகளில் எத்தனை “அறிக்கையிடப்பட்ட இறப்புகள்” பிரிவிலும், “உண்மையான இறப்புகள்” பிரிவிலும் வருகின்றன?

நான்காவதாக, கடந்த ஒன்று, இரண்டு அல்லது மூன்று மாதங்களின் தினசரி இறப்பு எண்ணிக்கைக்கான திருத்தத்தை வெளியிட கே.கே.எம். தயாராக இருக்கிறதா?

சமீபத்தில், தேசிய மீட்சி திட்ட மாநாட்டில் கோவிட் -19 தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் போரும் திட்டங்களும் தோல்வியடையவில்லை என்று முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின் தொடர்ந்து கூறிக்கொள்வதை என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

மார்ச் 1, 2020 அன்று முஹைதீன் பிரதமரானபோது, ​​நாம் 29 கோவிட் -19 நேர்வுகளையும் சுழிய இறப்புகளையும் பதிவு செய்தோம். இன்று, நாம் இரண்டு மில்லியன் கோவிட் -19 நேர்வுகளையும் 21,000 இறப்புகளையும் தாண்டிவிட்டோம்.

தடுப்பூசி திட்டம் மெதுவாக நகர்கிறது

16 செப்டம்பர், 2020-ல், 57-வது மலேசியத் தினத்தைக் கொண்டாடிய போது நாம் 89-வது இடத்தில் இருந்தோம்.

ஆனால், கடந்த 12 மாதங்களில், 68 மில்லியன் நாடுகளின் தரவரிசையை கடந்து, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நேர்வுகளுடன் 21-வது இடத்தை நாம் பெற்றுள்ளோம். மேலும், 20 மில்லியன் நாடுகளுடன் இணைந்து, இரண்டு மில்லியன் ஒட்டுமொத்த கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளோம்.

ஆசியானில் அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளைக் கொண்ட நாடுகளில் நாம், கடந்த 26 நாட்களாக, இந்தோனேசியாவை விட அதிகக் கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்தோம் – உண்மையில், நேற்று முன்தினம் மலேசியாவில் பதிவான 19,198 நேர்வுகளுடன் ஒப்பிடுகையில், இந்தோனேசியா 3,779 நேர்வுகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.

நேற்று முன்தினம், அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளின் அடிப்படையில் நாம் உலகின் ஆறாவது நாடாகவும், அதிக எண்ணிக்கையிலான இறப்புகளின் அடிப்படையில் நான்காவது நாடாகவும் மாறினோம். நேற்று, புதிய வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அதிக இறப்புகளின் அடிப்படையில் நாம் எட்டாவது மற்றும் நான்காவது இடத்தில் இருந்தோம்.

நேற்று முன்தினம், கோவிட் -19 காரணமாக 292 இறப்புகளை நாம் பதிவ்வு செய்தொம், உலகின் முதல் நான்கு நாடுகள் அதிக ஒட்டுமொத்த இறப்புகளைப் பதிவு செய்தன – அமெரிக்கா (246 இறப்புகள்), இந்தியா (210 இறப்புகள்), பிரேசில் (216 இறப்புகள்) மற்றும் பிரிட்டன் (56 உயிரிழப்புகள்) போன்றவை.

இவை அனைத்தும் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கத்தின் திட்டங்கள் எவ்வளவு தோல்வியடைந்துள்ளன என்பதற்குத் தெளிவான அறிகுறியாக இல்லையா?

நேற்று, தேசியத் தடுப்பூசி இப்போது குறைந்து வருகிறதா என்று கேட்டேன் – ஒரு நாளைக்கு அரை மில்லியன் மருந்தளவு தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், நாம் 258,929 மருந்தளவு விகிதத்தை மட்டுமே அடைந்துள்ளோம்.

நேற்று விநியோகிக்கப்பட்ட மருந்தளவு விகிதமும் 227,476 மருந்தளவுகள் எனக் குறைவாக இருந்தது.

இது தொடர்பாக நமக்கு சுகாதார அமைச்சரின் விளக்கம் தேவை.