மலேசிய ஒம்புட்ஸ்மேன் மசோதா அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் – பிரதமர்

அடுத்த ஆண்டு, மலேசிய ஒம்புட்ஸ்மேன் மசோதாவை (ஆர்.ஆர்.யு.) அரசாங்கம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

(‘ஒம்புட்ஸ்மேன்’ – தவறான நிர்வாகம் அல்லது உரிமை மீறல் புகார்களை விசாரித்து கையாள்வதன் மூலம் பொது நலனை பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்படும் குழு அல்லது அதிகாரிகள்)

நாடாளுமன்றத்தில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வரைவு மசோதா தயாரிப்பது தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் அமைச்சரவைக்குக் கொண்டு வரப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மலேசிய ஒம்புட்ஸ்மேன் ஒரு சுயாதீனமான, பாரபட்சமற்ற அமைப்பாகும், இது அரசு நிறுவனங்களுக்கு எதிரான பொது புகார்களுக்குத் தீர்வு காணும்.

“எனவே, மலேசிய ஒம்புட்ஸ்மேன் சட்டம் இயற்றப்படுவதைத் தொடர அரசு உறுதிபூண்டுள்ளது.

“மலேசிய ஒம்புட்ஸ்மேன் மசோதா முடிவு செய்யப்படுவதற்கு முன் வரைவின் இறுதி கட்டத்தில் உள்ளது.

மலேசிய ஒம்புட்ஸ்மேன் மசோதா 2021-ஆம் ஆண்டின் இறுதியில், அமைச்சரவையின் ஒப்புதலுக்குக் கொண்டுவரப்பட்டவுடன், 2022-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று பிரதமர் கூறினார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா எழுப்பிய கேள்விக்கு இஸ்மாயில் சப்ரியின் எழுத்துப்பூர்வமான பதில் இது.

அதன் சீர்திருத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2019-ஆம் ஆண்டில் பி.எச். அமைச்சரவையால் ஓம்புட்ஸ்மேன் நிறுவப்படுவது முதலில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அப்போதைய சட்டத்துறை அமைச்சர் லீயு வூய் கியோங்கின் கூற்றுப்படி, இது பொது சேவை விநியோக முறைக்கு எதிரான புகார்கள் மற்றும் குறைகளைச் சமாளிக்கவும், அரசு திறமையாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுவதை உறுதிசெய்யும் ஒரு தளமாக செயல்படும்.

“மலேசிய ஒம்புட்ஸ்மேன் சட்டம், பொது நம்பிக்கையை அதிகரிப்பதையும் பொது சேவை விநியோக அமைப்பின் நம்பகத்தன்மையில் நம்பிக்கை குறைவதைச் சமாளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு நிறுவப்படுகிறது,” என்று அப்போது லீயூ கூறினார்.