எஸ்.தி.பி.எம். மாணவர்களின் பொதுப் பல்கலைக்கழக விண்ணப்பங்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது

மலேசிய உயர்கல்விச் சான்றிதழ் (எஸ்.தி.பி.எம்.) மற்றும் அதற்கு நிகரான சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கான பொது பல்கலைக்கழக (யூ.ஏ.) அமர்வு 2021/2022 சேர்க்கைக்கான விண்ணப்பங்களின் முடிவுகள், இன்று மதியம் 12 மணி முதல் செப்டம்பர் 25 வரை இயங்கலையில் அறிவிக்கப்படும் என்று உயர்க்கல்வி அமைக்சு (கே.பி.தி.) தெரிவித்துள்ளது.

https://jpt.utm.myhttp://jpt.uum.edu.myhttps://jpt.unimas.myhttp://jpt.ums.edu.my மற்றும் http://jpt.umt.edu.my ஆகிய இணைப்புகள் மூலம் விண்ணப்ப நிலை மாணவர்கள் சரிபார்க்கலாம் என்று கே.பி.தி. தெரிவித்தது.

கே.பி.தி. அறிக்கையின்படி, ஒவ்வொரு வெற்றியடைந்த விண்ணப்பதாரரும், ஏற்பு மற்றும் சலுகை உறுதி கடித்தத்தை நாளை முதல் செப்டம்பர் 25 வரையில் உறுதி செய்யலாம்.

கே.பி.தி.யின் அறிக்கையின்படி, 10 நாட்களுக்குள் சலுகையை ஏற்க ஒப்புக்கொண்டதாக வேட்பாளர் உறுதிசெய்த பிறகு, நாளை முதல் வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு அதிகாரப்பூர்வச் சலுகைக் கடிதத்தை யூ.ஏ. வழங்கும்.

எந்தவொரு சலுகையையும் ஏற்கத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு, UPUOnline மேல்முறையீடு மூலம், http://upu.moe.gov.my -இல், இன்று முதல் செப்டம்பர் 25 வரை 11 நாட்களுக்குள் முறையீடு செய்யலாம்.

“2021/2022 கல்வி அமர்வுக்கான இடச் சலுகை இறுதியானது.

“பயிற்சி திட்டம் மற்றும் பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கான எந்தவொரு விண்ணப்பமும் அனுமதிக்கப்படாது, அதே நேரத்தில் மேல்முறையீட்டு தேர்வு கொள்கையானது புதிய மாணவர்களின் பதிவு முடிந்தபின், பயிற்சி திட்டத்தின் படி, காலியிடங்களுக்கு உட்பட்டு வழங்கப்படும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, விண்ணப்பதாரர்கள் BKPA JPT-ஐ, 03-8870 8200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] -க்கு மின்னஞ்சல் செய்யலாம் அல்லது சமூக ஊடகங்கலான முகநூல் (KEMASUKAN BPKP JPT), படவரி (@KEMASUKANBkpa), UPU பின்னூட்ட அமைப்பை உலாவலாம்.

  • பெர்னாமா