எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் தாக்கல் செய்த அவதூறு வழக்குக்கு எதிராக – நீண்டகாலமாக தாமதமாகி வந்த – கைரி ஜமாலுதீனின் சட்டக் குழுவின் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மூன்று நீதிபதிகள் அடங்கியக் குழுவின் தலைவரான, லீ ஸ்வீ செங், கைரியின் தற்காப்பு குழு தலைவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவரது தரப்பு மற்ற வழக்கறிஞர்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சரின் வழக்கறிஞர், சாரா மாலினி அபிஷேகத்திடம் வலியுறுத்தினார்.
தற்காப்பு குழுவின் தலைவர் முஹம்மது ஷாபி அப்துல்லா உடல்நலக்குறைவு காரணமாக, இன்று இயங்கலை விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற அடிப்படையில், சாரா முன்பு ஒத்திவைப்புக்காக (இன்று திட்டமிடப்பட்டது) விண்ணப்பித்திருந்தார்.
ஷாஃபிக்கு வலது மணிக்கட்டு மற்றும் தோள்பட்டையில் வலியைத் தவிர, முடக்கு வாதம் காரணமாகக் காய்ச்சல் இருப்பதாக அவர் கூறினார்.
2008-ல், கைரியின் “பிளேய் பேக்” அறிக்கை தொடர்பாக, அன்வருக்கு RM150,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றத்தின் மேல்முறையீட்டின் தகுதிகளை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
செப்டம்பர் 29, 2017 அன்று, இந்த அறிக்கை வழி, கைரி அன்வாரை அவமதித்ததாகக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்பளித்தது.
முன்னதாக, தனது பாதுகாப்பு அறிக்கையை மாற்ற விரும்பியக் கைரியின் விண்ணப்பத்தையும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இன்று லீ, இந்த வழக்கு 2017 முதல் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
“அடுத்த ஒத்திவைப்பு (இன்று) கடைசி ஒத்திவைப்பு. மேலும் ஒத்திவைப்பு அனுமதிக்கப்படாது.
“தலைமை வழக்கறிஞருக்கு (ஷாஃபி) உடல்நலப் பிரச்சனை இருந்தால், அவருக்குப் பதிலாக மற்றொரு வழக்கறிஞர் வழக்கை வாதாட வேண்டும்.
“இந்த வழக்கு, என்ன நடந்தாலும் (மழை அல்லது வெள்ளம் வந்தாலும்) தொடரும்,” என்று லீ கூறினார்.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவில், வஸீர் ஆலாம் மைடின் மீரா மற்றும் டேரில் கூன் சீயு ச்சை ஆகியோர் இருந்தனர்.
அன்வரின் வழக்கறிஞர் குழுவிடம் கேட்டபோது, ஒத்திவைப்பு விண்ணப்பத்திற்குத் தனது தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று ஜே லீலா கூறினார்.
இன்று காலை 11 மணிக்கு, மேல்முறையீட்டு பதிவேடு நீதிமன்றத்தில் கைரியின் மேல்முறையீட்டுக்கு ஒரு புதிய தேதியை லீ அமைத்தார்.
19 பிப்ரவரி, 2018 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் அதன் தகுதிகளைக் கேட்காமல் தொழில்நுட்ப அடிப்படையில் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி, நிராகரிப்புக்கு எதிரான கைரியின் மேல்முறையீட்டை மத்திய நீதிமன்றம் அனுமதித்ததோடு, அதை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.