சினோவேக் பெறுநர்களுக்கு, இங்கிலாந்து பயணம் மிகவும் கடினமாக இருக்கும்

நேற்று, பிரிட்டன் வெளியிட்ட பயண விதிகள், சினோவேக் பெறுநர்களுக்கு இங்கிலாந்துக்கான பயணத்தை மிகவும் கடினமாக்கலாம்.

புதிய விதிகளின்படி, அக்டோபர் 4 முதல், அஸ்ட்ராஸெனெகா, ஃபைசர், மொடர்னா அல்லது ஜான்சென் தடுப்பூசிகளைப் பெறும் பார்வையாளர்கள் தளர்வான பயண விதிகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்தப் புதிய விதியின் கீழ், பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகளைப் பெறுபவர்கள் புறப்படுவதற்கு முன், கோவிட் -19 பரிசோதனையை எடுக்க வேண்டியதில்லை.

இருப்பினும், அவர்கள் இங்கிலாந்துக்கு வந்த இரண்டாவது நாள் அல்லது அதற்கு முன்னதாக, கோவிட் -19 பரிசோதனையை முன்பதிவு செய்து, பணம் செலுத்தி, சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அவர்கள் வந்த 48 மணி நேரத்திற்குள், எந்த நேரத்திலும் பயணிகள் அனுமதி படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

கூடுதலாக, அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியதில்லை.

இந்த விதிமுறைகளை வெளியிடப்பட்ட இங்கிலாந்து அரசாங்க வலைத்தளம், சினோவேக் பற்றி குறிப்பிடவில்லை, அதாவது அது தளர்வான விதிகளுக்கு தகுதி பெறவில்லை.

மறுபுறம், சினோவேக் பெறுநர்கள், தடுப்பூசி போடாத பார்வையாளர்களின் அதே விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

இங்கிலாந்து செல்வதற்கு 3 நாட்களுக்கு முன், கோவிட் -19 பரிசோதனையை மேற்கொள்வதும் இதில் அடங்கும்.

அவர்கள் இங்கிலாந்திற்கு வந்தவுடன் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.

தற்போது, ​​தடுப்பூசி போடப்பட்ட மலேசியர்களில் 46 விழுக்காட்டினர் சினோவேக் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், இது உலகச் சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தங்கள் சொந்த வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ள ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கும், இந்தப் புதிய விதிகள் கொண்டு செல்லப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இங்கிலாந்து அரசாங்க இணையதளம், இந்த மூன்று நாடுகளுக்கும் இங்கிலாந்திற்கு விண்ணப்பிக்கும்போது புதிய விதிமுறைகளைச் சேர்க்கும் வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்கவில்லை.