அரசாங்கம் அசாதாரண இலாப வரியை விதிக்க முடியாது

நாடாளுமன்றம் | குறிப்பிட்ட காலங்களில், அசாதாரண இலாபம் ஈட்டும் இரப்பர் உற்பத்தி நிறுவனங்களுக்குப் புதிய வரிக் கொள்கைகள் அல்லது சலுகைகளை உருவாக்கும் நடவடிக்கை, நாட்டில் முதலீடு செய்வதற்கான முதலீட்டாளர்களின் உறுதிப்பாட்டைப் பாதிக்கும் என்று துணை நிதி அமைச்சர் முகமட் ஷாஹர் அப்துல்லா கூறினார்.

சையத் சதிக் சையது அப்துல் இரஹ்மானின் கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த முகமட் ஷஹார், இந்த விஷயத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிலும் அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

“பெரிய சுற்றுச்சூழல் அமைப்பைப் பார்க்காமல் நாங்கள் வரி நடவடிக்கைகளைச் செய்ய முடியாது. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்படி தேசிய முதலீடுகள் செய்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

“புதிய கொள்கைகள் அல்லது புதிய வரி சலுகைகள் அசாதாரணமானால் அல்லது இலாபத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இது நம் நாட்டில் முதலீடு செய்ய நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் அர்ப்பணிப்பு அல்லது விருப்பத்தையும் பாதிக்கும்.

“என்ன செய்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்,” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.

முன்னதாக, இரப்பர் உற்பத்தி நிறுவனங்களுக்கு அசாதாரண இலாபத்திற்கு இன்னும் வரி விதிக்க வேண்டாமா என்று சையத் சதிக் கேட்டார்.

“வெளிநாட்டில் வசூலிக்கப்படுகிறது (அசாதாரண இலாப வரி). மலேசியாவில், அவர்களின் இலாபம் (இரப்பர் நிறுவனங்கள்) இரட்டிப்பாக இருந்தாலும், நாம் அதனை இன்னும் (செயல்படுத்த) விரும்பவில்லை.

“இந்த இரப்பர் நிறுவனங்கள் அரசாங்கத்தில் எந்தக் கட்சிக்கும் அரசியல் பங்களிப்பைச் செய்கின்றனவா, எனக்கு அதிகாரப்பூர்வ பதில் வேண்டும்?” என்றார் அவர்.

சையத் சதிக் தவிர, மே 6-ம் தேதி, பேங்க் பெம்பங்குனான் மலேசியா பெர்ஹாட் (பிபிஎம்பி) தலைவர் நசீர் ரசாக், கோவிட் -19 தொற்றுநோயால் பெரும் இலாபம் ஈட்டியதாக நிரூபிக்கப்பட்ட கையுறை உற்பத்தியாளர்கள் போன்ற நிறுவனங்களுக்கு ஏன் கூடுதல் வரி அல்லது ‘ சூப்பர் டெக்ஸ்’ விதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

சிஐஎம்பி குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் முன்னாள் தலைவருமான அவர், ஒரு பாதுகாப்பு வலை மற்றும் மிகவும் பயனுள்ள மறுவிநியோகக் கொள்கையை வழங்குவதற்காக தற்போதுள்ள வரிவிதிப்பு முறை மிகவும் முற்போக்கானதாக இருக்க வேண்டிய நேரம் இது என்றார்.

“மலேசியாவில், இந்தத் தொற்றுநோயின் விளைவாக பில்லியன் கணக்கான பெரும் இலாபம் ஈட்டிய கையுறை உற்பத்தி நிறுவனங்கள், தொற்றுநோயைக் கையாள்வதற்கான செலவை ஈடுசெய்ய எந்தக் கூடுதல் வரிகளுக்கும் உட்படுத்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.