பி.கே.பி.-யின் போது குடும்ப வன்முறை வழக்குகள் அதிகரித்தன

நாடாளுமன்றம் | கடந்த ஆண்டை விட, வீட்டு வன்முறை வழக்குகள், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.) காலத்தில் அதிகரித்துள்ளது.

இன்று, மக்களவையில் நடைபெற்ற அமைச்சரவை கேள்விகள் அமர்வில் பேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா முகமட் ஹருன், 2019-இல் மொத்தம் 5,657 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், இந்த எண்ணிக்கை 2020-இல் 5,260 ஆகக் குறைந்துள்ளது.

ஜனவரி மற்றும் ஆகஸ்ட் 2021 காலப்பகுதியில், குடும்ப வன்முறை வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 4,905 இருக்கும் என்று ரினா கூறினார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சராசரியாக 512 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2020 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் சராசரியாக 438 மற்றும் 471 வழக்குகள் பதிவாகின.

“பி.கே.பி. நமது நாட்டைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதித்துள்ளது.

“கோவிட் -19 தொற்றால் ஏற்படும் குடும்ப நிறுவனங்களின் நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் அமைச்சு மிகவும் அக்கறை கொண்டுள்ளது மற்றும் உறுதிபூண்டுள்ளது” என்று இன்று ரினா கூறினார்.