கோவிட் -19 : மேலும் 250 பலி, ஒட்டுமொத்த இறப்புகள் 24,931

சுகாதார அமைச்சு கிதப் தரவு களஞ்சியத்தின் மூலம், நேற்று (செப்டம்பர் 24) மொத்தம் 250 கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்தது, இது ஒட்டுமொத்த இறப்புகளை 24,931-ஆக கொண்டு வந்தது.

நேற்று பதிவாகிய இறப்புகளில், 19.60 விழுக்காடு அல்லது 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்தனர்.

சிலாங்கூர் 65 இறப்புகளுடன் அதிக எண்ணிக்கையிலான புதிய இறப்புகளைப் பதிவுசெய்தது, புதிதாக அறிவிக்கப்பட்ட இறப்புகளில் 26.00 விழுக்காடு சிலாங்கூரில் பதிவாகியது.

மீதமுள்ள இறப்புகள், சபா (43), ஜொகூர் (41), பினாங்கு (20), சரவாக் (16), கிளந்தான் (14), பேராக் (14), பஹாங் (9), கெடா (6), திரெங்கானு (6), கோலாலம்பூர் (6), நெகிரி செம்பிலான் (4), மலாக்கா (3) மற்றும் பெர்லிஸில் (3) பதிவாகியுள்ளது.

லாபுவான் மற்றும் புத்ராஜயாவில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

பதிவான 250 இறப்புகளில், 170 இறப்புகள் கடந்த ஏழு நாட்களில் பதிபானவை. நேற்று, ஒன்பது இறப்புகள் மட்டுமே நிகழ்ந்தன.

மீதமுள்ள இறப்புகள் ஒரு வாரத்திற்கு முன்பு நிகழ்ந்தவை, ஆனால் தரவு அறிக்கையின் பின்னடைவு காரணமாக நேற்று அவை பதிவு செய்யப்பட்டன.

இன்றுவரை, இந்த மாதம் 8,276 கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த ஆண்டு ஜனவரியில் தொற்று தொடங்கியதிலிருந்து, 2021 செப்டம்பர் மாதமே மிகவும் ‘இரத்தக்களரி’ மாதமாக உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 7,642 கோவிட் -19 இறப்புகள், ஜூலை மாதம் 3,858, ஜூன் மாதத்தில் 2,380 மற்றும் மே மாதத்தில் 1,302 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, 195,837 கோவிட் -19 நேர்வுகள் செயலில் உள்ளன. இது ஒரு வாரத்திற்கு முன்பு 221,339 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது, 11.52 விழுக்காடு குறைவு ஆகும்.

அப்படியிருந்தும், கடந்த 30 நாட்களுடன் ஒப்பிடும்போது, ​​செயலில் உள்ள நேர்வுகளின் எண்ணிக்கை 264,295-இலிருந்து 25.90 விழுக்காடு குறைந்துள்ளது.