ஆர்எம்கே12 நிதிக்கு அதிக வரி பணம் தேவை

12-வது மலேசியத் திட்டத்திற்கான (ஆர்எம்கே12) மேம்பாட்டிற்கு, 600 பில்லியன் ரிங்கிட் செலவாகும் – ஆர்எம்கே11 விட 60.96 விழுக்காடு இது அதிகம்.

நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்க, அரசாங்கம் கடனைக் குறைத்து வரிகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.

“ஆர்எம்கே12-யின் கீழ், அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் நிதியளிக்க போதுமான நிதி இருப்பதை உறுதி செய்ய, மத்திய கால நிதி கட்டமைப்பின் அடிப்படையில் நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு அரசு உறுதியாக உள்ளது.

“நாட்டின் வரி கொள்கையை விரிவுபடுத்துவதற்கும், கடன் கடமைகளுக்கான அரசாங்கத்தின் திறனை அதிகரிப்பதற்கும் நடுத்தர கால வருமான திட்டம் ஆதரிக்கிறது,” என்று அவர் கூறினார்.

“நிதி ஒருங்கிணைப்பு” என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) தொடர்புடைய தேசியக் கடனின் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைக் குறிக்கிறது.

மேலும் கடன் வாங்க, தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காடாக இருந்த தற்காலிகச் சட்டரீதியான கடன் வரம்பை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்றும் ஜஃப்ருல் விளக்கினார்.

“இது மலேசியாவின் பற்றாக்குறை இலக்கை அதிகரிக்கும், இது 2021-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5 விழுக்காடு முதல் ஏழு விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி பொறுப்பு சட்டத்தை அமல்படுத்துவது, நாட்டின் நிதி நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார்.