அஹ்மத் மஸ்லான் விடுவிக்கப்பட்டது ‘இரண்டு தரநிலை’ – எம்.பி.

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார், அம்னோ தலைமைச் செயலாளர் அஹ்மத் மஸ்லான், RM1.1 மில்லியன் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து, இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தார்.

“இந்த வழக்கு நம் நாட்டில் நீதி அமைப்பில் ‘இரண்டு தரநிலை’ நடைமுறையில் இருப்பதை நிரூபிக்கிறது.

“குற்றம் சாட்டப்பட்டவர் நாடாளுமன்றத்தின் செல்வாக்கு மிக்க உறுப்பினராக இல்லாவிட்டால் இது நடந்திருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் கூறினார்.

“தற்போதுள்ள அரசாங்கம் அனைத்து நீதிமன்றத் திரளைகளையும் விடுவிக்க, இதுபோன்ற ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று இது அர்த்தப்படுத்துகிறதா?”

நஜிப் ரசாக்கிடமிருந்து உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு (ஐஆர்பி) பெறப்பட்ட ரிம 2 மில்லியனை அறிவிக்க தவறியது மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) பொய்யான அறிக்கைகளை வழங்கியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து, அஹ்மத் மஸ்லானை விடுதலை செய்ய கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று முடிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

அஹ்மத் மஸ்லானுக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளையும் அரசு திரும்பப் பெறுவதாக துணை அரசு வழக்கறிஞர் (டிபிபி) முகமது முக்சானி ஃபரிஸ் முகமட் மொக்தார் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, நீதிபதி அஹ்மத் ஷஹிர் முகமது சல்லே இவ்வாறு தீர்ப்பளித்தார்.

பொந்தியான் எம்பி 1.1 மில்லியன் ரிங்கிட் தொகையை கொடுக்க ஒப்புக்கொண்ட பிறகு இது நடந்துள்ளது.

சிவகுமார், நாட்டின் சட்ட அமைப்பு “ஆளும் அரசாங்கத்தின் பக்கம் மட்டுமே விளையாடும் போது” அட்டர்னி ஜெனரல் நிறுவனத்தின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் கூறினார்.

“இந்த நடவடிக்கை நீதித்துறை மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் பிம்பத்தை பெரிதும் பாதிக்கும் ஒரு விஷயமாக மக்கள் பார்க்கிறார்கள். அஹ்மத் மஸ்லானுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவது ஏற்புடையதல்ல.

“நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழி வகுப்பதற்காக, இது வேண்டுமென்றே வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பா,” என்றும் அவர் கேட்டார்.