மாநில எல்லைகளைக் கடக்க மாணவர்களுக்கு அனுமதி

பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் நோக்கத்தில், மாநில எல்லைகளைக் கடக்க, மாணவர்களுக்கு அரச மலேசியக் காவல்துறை (பி.டி.ஆர்.எம்.) அனுமதி அளிக்கிறது.

மாணவர்கள் (தினசரி பள்ளிகள்) கல்வி அமைச்சு, பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்களிடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதத்தைப் பெற வேண்டும் என்று புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு இயக்குநர் ஹசானி கஸாலி கூறினார்.

தேசியப் பாதுகாப்பு மன்றம், பள்ளிகள் அல்லது கல்வி நிறுவன மாணவர்களுக்கான செந்தர இயங்குதல் நடைமுறைகளைப் (எஸ்ஓபி) புதுப்பித்துள்ளதாக அவர் கூறினார்.

“பள்ளி அல்லது கல்வி நிறுவனத்திற்குச் செல்லும் மாணவர்களுடன் ஒரு பாதுகாவலரும் சேர்ந்து கொள்ளலாம்.

“… மற்றும் கற்பித்தல் அல்லது கற்றல் நோக்கங்களுக்காக, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு (அல்லது) கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் அல்லது பயிற்றுநர்கள் நகர்த்தப்படுவதற்கு, கல்வி அமைச்சு அல்லது பள்ளி (அல்லது) கல்வி நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதத்துடன் அனுமதிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

மாணவர்களை விடுதிகளில் சேர்ப்பதற்கான பயணம், கல்வி அமைச்சு அல்லது பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்களின் உறுதிப்படுத்தல் கடிதத்தை, மாநில எல்லைகளைக் கடக்கும் நோக்கங்களுக்காக அனுமதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தப் பயணங்களுக்கு வாகனத்தில் உள்ளவர் எண்ணிக்கை, வாகனத்தின் திறனை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் மேலும் விளக்கினார்.

“எனவே, இந்த நோக்கத்திற்காக மாநில எல்லை கடந்து பயணிக்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது கல்வியாளர்களை, சாலை தடுப்பில் இருக்கும் பி.டி.ஆர்.எம். பணியாளர்களிடம் அனுமதி கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும், ” என்று அவர் கூறினார்.

தேசிய மீட்சி திட்டத்தின் (பிபிஎன்) இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் உள்ள மாநிலங்களுக்கான பள்ளிகளைத் திறப்பதற்கான தேதி அக்டோபர் 3 என்று மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிவித்தார்.

இருப்பினும், பிபிஎன்-இன் முதல் கட்டத்தில் இருக்கும் மாநிலங்களுக்குப் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை என்று டாக்டர் ராட்ஸி கூறினார்.

பிபிஎன்-இன் அனைத்து கட்டங்களிலும் உள்ள மாநிலங்களில், 2021/2022 கல்வி அமர்வு மாணவர்கள் சேர்க்கைக்காக, இந்த அக்டோபரில் உயர்க்கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க தனது அமைச்சு திட்டமிட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சர் டாக்டர் நொரைய்னி அஹ்மத் முன்பு கூறியிருந்தார்.

  • பெர்னாமா