கோவிட் -19 தொற்றுடன் வாழத் தயாரா? – சுகாதார அமைச்சு ஆய்வு

கோவிட் -19 தொற்று பரவலுடன் வாழ, பொதுமக்களின் தயார்நிலை குறித்த ஒரு கணக்கெடுப்பை மலேசிய சுகாதார அமைச்சு நடத்துகிறது.

இன்று காலை, சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனைத் தெரிவித்தார்.

“நீங்கள் கோவிட் -19 தொற்றுடன் வாழத் தயாரா?” என்று அவர் கேட்டார்.

அதில் பங்கேற்க, பொதுமக்கள் ஓர் இயங்கலை கணக்கெடுப்பு படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

படிவத்தில் உள்ள விளக்கம், கோவிட் -19 தொற்றுடன் வாழ, பொதுமக்களின் தயார்நிலை குறித்து அறிய இது செய்யப்படுகிறது என்று கூறுகிறது.

“சரியானது அல்லது தவறு என்று கருந்தப்படும் எந்தப் பதிலும் இல்லை.

“இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள், மலேசியக் குடும்பங்களுக்குக் கோவிட் -19 தொற்றுடன் வாழ்வதற்கான சுகாதார மேம்பாடு மற்றும் கல்வி உத்திகளை அளிக்க பயன்படும்,” என்று அவர் கூறினார்.

பொதுவாக எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக மொத்தம் 20 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பதிலளிப்பவர்கள் 1 முதல் 5 வரையிலான அளவுகோலை அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவில் “ஆம்” அல்லது “இல்லை” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து பதிலளிக்கலாம்.

கணக்கெடுப்பின் போது பங்கேற்பாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் உட்பட முக்கியமான தகவல்கள் பகிரப்படவில்லை.

கணக்கெடுப்பில் பங்கேற்பாளர்கள் அந்தந்த வயதுக் குழுக்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிலை மற்றும் அவர்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை மட்டுமே தெரிவிக்கும்படி கேட்கப்படுவார்கள்.

ஆய்வில் பங்கேற்க விரும்புபவர்கள் இங்கே பங்கேற்கலாம்.