பண்டோரா காகிதம் : அரசாங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து பிஎச் வெளியேற ஹசான் அறிவுறுத்து

புத்ராஜெயா மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக் கொள்ளாவிட்டால், அரசாங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) விலக வேண்டுமென்று பிகேஆர் எம்.பி. பரிந்துரைத்துள்ளார்.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (பிவிஐ) போன்ற கடலோர நிதி மையங்களில், இரகசிய பணம் – பராமரிப்பு நடவடிக்கைகள் வெளிவந்ததைத் தொடர்ந்து ஹசான் அப்துல் கரீம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த வெளிப்பாடு – உலகெங்கிலும் உள்ள பல உயர்மட்ட நபர்களை உள்ளடக்கியது – பண்டோரா பேப்பர் எனப்படும் ஓர் ஆவணத்தின் மூலம் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் கொண்டு வந்த பிரேரணை மீது நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று ஹசன் கூறினார்.

2004 முதல் 2014 வரை, சில அரசியல் மற்றும் கார்ப்பரேட் பிரமுகர்கள், அவர்களின் குழந்தைகள் மற்றும் மனைவிகள் பிவிஐ மற்றும் பிற கடபோர நிதி மையங்களில் RM1.8 டிரில்லியன் வரை மதிப்பிடப்பட்ட நிதியை வைத்திருப்பதாக அவர் கூறினார்.

“அரசு உடனடியாக ஓர் அரச விசாரணை ஆணையத்தை (ஆர்சிஐ) அமைக்க வேண்டும்,” என்று இன்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

புத்ராஜெயா சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோத வழிகளில் பணம் கண்டுபிடிக்கப்பட்டால், அதை உடனடியாக அரசுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று மூன்றாவது கோரிக்கையை பிஎச் முன்வைக்க வேண்டும் என்றும் அந்தப் பாசிர் கூடாங் எம்.பி. வலியுறுத்தினார்.