`அருள் கந்தா பிஏசி விசாரணைக்கு வருவதை யாரும் தடுக்கவில்லை` – சாட்சிகள்

முன்னாள் 1எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, நிறுவனத்தின் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) கணக்காய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒருபோதும் தடை விதிக்கப்படவில்லை என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிஏசி-இடம் வழங்கப்படுவதற்கு முன்பு, 1எம்டிபியின் தணிக்கை அறிக்கையைத் திருத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அருள் கந்தா ஆகியோர் மீதான விசாரணையில், முன்னாள் தேசியத் தணிக்கை துறை அதிகாரி சாடாதுல் நஃபிசா அஹ்மத் பஷீர் சாட்சியமளித்தார்.

மறு ஆய்வின் போது, துணை அரசு வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராம், ​​ஏழாவது அரசு தரப்பு சாட்சியான அவர், தணிக்கையில் ஏதேனும் பிரச்சனைகள் குறித்து பிஏசிக்கு விளக்கம் அளிப்பதை யாரும் தடுக்கவில்லை என்று விளக்கினார்.

நீதிபதி மொஹமட் ஸைய்னி மஸ்லான் முன்னிலையில் நடந்த முந்தைய நடவடிக்கைகளில், 1எம்டிபி தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தெளிவுபடுத்த, தேசியத் தணிக்கை துறையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்குப் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அருள் காந்தாவின் பாதுகாப்பு குழு கூறியது.

ஸ்ரீ ராம் : முதல் குற்றவாளியான அருள் கந்தாவிற்குப் பதில் சொல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை (தணிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள்) என்பது உண்மையா?

சாடாதுல் நஃபிசா : உண்மை இல்லை.

ஸ்ரீ ராம் : உங்களுக்குத் தெரிந்த வரையில், நீங்கள் அல்லது வேறு யாராவது அருள் கந்தா விளக்கம் அளிக்க பிஏசி கூட்டத்தில் (2016-இல்) கலந்துகொள்வதைத் தடுத்தீர்களா?

சாடாதுல் நஃபிசா : இல்லை.

ஸ்ரீ ராம்: அதைத் தடுக்க நீங்கள் எதுவும் செய்யவில்லையா?

சாடாதுல் நஃபிசா : இல்லை.

ஸ்ரீ ராம்: உங்கள் கருத்துப்படி, பிஏசிக்கு விளக்கம் தேவைப்பட்டால், அவர்கள் (அருள் கந்தா) அழைப்பார்களா?

சாடாதுல் நஃபிசா : ஆம்.

மார்ச் 2016-இல், பிஏசி கூட்டப்படுவதற்கு முன்பு, அருள் கந்தா 1எம்டிபியுடன் ஒரு வருடம் இருந்தார் என்பதைச் சாட்சியும் ஸ்ரீ ராமுடன் ஒப்புக் கொண்டார்.

நவம்பர் 29-ஆம் தேதி, விசாரணை மீண்டும் தொடங்கும்.

1எம்டிபியின் இறுதி தணிக்கை அறிக்கையைப் பிஏசியிடம் ஒப்படைப்பதற்கு முன், அவர் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, திருத்தங்களைச் செய்ய நஜிப் தனது பதவியைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தத் திருத்தங்களைச் செய்வதில், அருள் கந்தா நஜிப்பிற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.