பிஆர்என் மலாக்கா | தேசியக் கூட்டணி (பிஎன்), பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மற்றும் அம்னோ என, மும்முனை போட்டியை மலாக்கா மாநிலத் தேர்தல் (பிஆர்என்) காணும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது.
இன்று, அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறியபடி, அம்னோ – தேசிய முன்னணியின் முடிவிற்காகத் தொடர்ந்து காத்திருக்க முடியாது என்று பிஎன் தலைவர் முஹைதீன் யாசின் கூறினார்.
இன்றைய நிலவரப்படி, அம்னோ சொந்தமாகப் போட்டியிட விரும்புகிறதா அல்லது பிஎன்-உடன் வேலை செய்ய விரும்புகிறதா என்பதற்கான எந்தவொரு அறிகுறியையும் உடனடியாகக் காட்டுவதாகத் தெரியவில்லை என முஹைதீன் கூறினார்..
“எனவே, இன்று நாங்கள் ஒரு முடிவை எடுப்போம், நாங்கள் மும்முனைகளில் போட்டியிடுவோம்.
“எங்கள் முடிவு உறுதியானது, ஏனென்றால் பிஆர்என்-ஐ எதிர்கொள்ள திட்டங்களை அமைக்க வேண்டிய நிலையில், நாங்கள் அத்தகைய முடிவை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியதாக, இன்று உத்துசான் மலேசியா மேற்கோள் காட்டியுள்ளது.
சிறந்த வழியைத் தேடுகிறோம்
அம்னோவின் முடிவிற்காக அவர்கள் தொடர்ந்து காத்திருக்கும் வேளையில், பிஆர்என்-ஐ எதிர்கொள்ள அம்னோ அதன் சொந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அவர் கூறினார்.
பெர்சத்து தலைவரான முஹைதீன், அம்னோவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறினார், ஆனால் மிக நீண்ட நேரம் கடந்து, ஏமாற்றத்தைக் கொடுக்கிறது, ஆனால் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில், பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான், மும்முனைப் போட்டியைத் தவிர்க்க இன்னும் வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மலாக்கா பிஆர்என்-இல் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையைப் பாஸ் இன்னும் இறுதி செய்யவில்லை என்றார்.
“நாங்கள் விவாதத்தில் இருக்கிறோம், அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை, நாங்கள் சிறந்த வழியைத் தேடுகிறோம்,” என்று அவர் கூறினார்.