‘பிஎச்-இன் அனைத்து பட்ஜெட்டுகளையும் பின்பற்றினாலும் பரவாயில்லை’

அக்கூட்டணி புதிதாக அறிமுகப்படுத்திய முன்மொழிவுகளை, மத்திய அரசு பட்ஜெட் 2022 மூலோபாய ஆவணத்தில் ஏற்றுக்கொண்டால் பக்காத்தான் ஹராப்பான் மகிழ்ச்சியடையும்.

இன்று ஆவணத்தை அறிமுகப்படுத்திய பின்னர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பட்ஜெட் 2022-க்கான நிதி அமைச்சுடனான உரையாடலில் ஈடுபட்டுள்ள மூன்று பிஎச் எம்.பி.-க்கள், தங்களின் பெரும்பாலான முன்மொழிவுகள் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தனர்.

“எல்லாவற்றையும் பின்பற்றினாலும் பரவாயில்லை. அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்,” என்று டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறினார்.

சுபாங் எம்பி வோங் சென் கூறுகையில், நிதி அமைச்சு இந்த விஷயத்தைச் செயல்படுத்துமா என்பது இந்த வெள்ளிக்கிழமைதான் தெரியும்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவி கவிழ்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தத்தின் (சி.எஸ்.எ.) ஒரு பகுதியாக பிஎச்-உடன் 2022 வரவு செலவுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசாங்கம் முன்பு உறுதியளித்துள்ளது.

பிஎச் 2022 பட்ஜெட் ஆவணம், இந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் 2022 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அதன் எம்.பி.க்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

அக்கூட்டணி மாற்று பட்ஜெட்டை வழங்கவில்லை.

பொதுவாக, பிஎச்-இன் மூலோபாயம், கோவிட்-19 நிதியில் RM45 பில்லியனைப் புகுத்தி பொருளாதார மீட்சிக்கு உதவுவது, தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தைச் சமாளிப்பது, ஏழைகளுக்கு உதவுவது மற்றும் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது அதில் அடங்கும்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கவும், மாநில அரசுகளுக்கு அதிக நிதி வழங்கவும், நிறுவன சீர்திருத்தங்களையும் பிஎச் முன்மொழிந்தது.

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பண மானியம் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு உதவி ஆகியவற்றையும் கூட்டணி முன்மொழிந்தது.

தற்போது, ​​குறிப்பிட்ட அமைச்சுகளை ஆய்வு செய்ய ஒன்பது சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும், தெரிவுக்குழுக்கள் எதுவும் இல்லாத ஒன்பது அமைச்சுக்கள் உள்ளன.

முந்தைய மூலோபாய ஆவணம் பற்றிய விளக்கத்தின் போது, ​​தேர்வுக் குழுவில் தற்போது போதுமான பணியாளர்கள் இல்லை என்றும் ஒவ்வொரு குழுவிற்கும் குறைந்தது இரண்டு ஆராய்ச்சி அதிகாரிகள் தேவை என்றும் புவா விளக்கினார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்புவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறப்புத் தேர்வுக் குழு, சிறந்த சரிபார்ப்பு மற்றும் சமநிலைக் கருவிகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

“இனி எந்த ஒரு மாற்றமும் செய்யாத ‘காப்பி கடை பேச்சு’களை நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.