புலம்பெயர்ந்தோர் கடத்தல் குற்றங்களுக்கான தண்டனைகள், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது தணடம் அல்லது இரண்டும் என்பவற்றில் இருந்து ஆயுள் தண்டனையாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளன, மேலும் சவுக்கடி தண்டனையும் விதிக்கப்படலாம்.
இன்று, மக்களவையில் உள்துறை துணை அமைச்சர் இஸ்மாயில் முகமது, முதல் வாசிப்புக்காகத் தாக்கல் செய்த ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு (திருத்தம்) மசோதா 2021-இல் இந்த விஷயம் உள்ளது.
தங்கள் பணிகளைச் செய்யும்போது, புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் பொது அதிகாரிகள் மிகவும் கடுமையான புலம்பெயர்ந்த கடத்தல் குற்றங்களுக்கு ஆளாவர் என்றும் மசோதா வழங்குகிறது.
புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் குற்றத்துக்கான சிறைத்தண்டனை, 15 ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை உயர்த்தப்பட்டதையும் இந்தத் திருத்தம் உள்ளடக்கியது.
கூடுதலாக, இந்தத் திருத்தம் போக்குவரத்தில் இருக்கும் நபர்களைக் கடத்தும் குற்றங்களுக்கான சிறைத்தண்டனையை அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மிகாமல் உயர்த்துவதையும் உள்ளடக்கியது.
ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 (சட்டம் 670) பலேர்மோ நெறிமுறை மற்றும் ஆட்கடத்தலுக்கு எதிரான ஆசியான் மாநாட்டின் தேவைகளுக்கு ஏற்ப, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை (ACTIP) உறுதிப்படுத்த இந்த மசோதா முயல்கிறது.
இந்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இந்த நாடாளுமன்ற அமர்விலேயே மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்மாயில் தெரிவித்தார்.
- பெர்னாமா