மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), கட்சி மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றால், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் மூலம் தேர்வு செய்யும் வகையில், மலாக்கா மாநில அரசியலமைப்பில் திருத்தம் செய்வதாக தேசிய முன்னணி (பிஎன்) உறுதியளித்துள்ளது.
பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறுகையில், மாநிலத்திலும் நாட்டிலும் அரசியல் நிலைத்தன்மையை பிஎன் -ஆல் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்று மலாக்கா மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றார்.
“மலாக்கா பிஎன் -இன் ஒப்புதலுடன், மத்திய பிஎன்-உடன், நாங்கள் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்றால், எங்கள் நண்பர்களிடையே ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் வகையில் பரிந்துரைத்து, மலாக்கா மாநில அரசியலமைப்பை நாங்கள் திருத்துவோம்,” என்று அவர், நேற்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் மலாக்கா பிஆர்என்-கான பிஎன் தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் போது கூறினார்.
தேர்தலின்றி சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பது மலேசியாவில் புதிய விஷயம் அல்ல, ஏனெனில் சபா மற்றும் திரெங்கானு ஆகிய இரண்டு மாநிலங்கள் ஏற்கனவே அதை நடைமுறைப்படுத்தியுள்ளன.
‘அரசியல் எதிரிகளைச் சபிக்காதீர்கள்’
அஹ்மத் ஜாஹிட் தனது உரையில், மலாக்கா பிஆர்என் -இல் பெர்சத்துவுடன் கட்சி ஒத்துழைக்காது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், பிரச்சாரத்தின் போது அதன் “எதிரிகளை” தாக்க வேண்டாம் என்று பிஎன் இயந்திரத்திற்கு அவர் நினைவூட்டினார், மக்களுக்கான சலுகைகள் மற்றும் நன்மைகள் பற்றி மட்டுமே பிஎன் பேச வேண்டும் என்றார்.
அஹ்மத் ஜாஹிட், பிஎன் அதன் உறுப்புக் கட்சிகளை ஓரங்கட்டிவிடாது என்றும், தேர்தலில் மசீச மற்றும் மஇகா-வுக்கு இடங்கள் இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
அதுமட்டுமின்றி, பிஎன் கூறு கட்சிகளை ஓர் அணியில் செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.