புக்கிட் கெலுகோர் எம்பி ராம்கர்பால் சிங், முந்தைய மாநில அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற நான்கு மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் ஏற்றுக்கொண்டால், பிஎச் ஒரு பெரிய தவறை செய்கிறது என்று அர்த்தம் என்றார்.
“அவர்களை ஏற்றுக்கொள்வது பிஎச்-இன் பெரிய தவறு, இது மலாக்கா மாநிலத் தேர்தல் (பிஆர்என்) மற்றும் 15-வது பொதுத் தேர்தலில், வாக்காளர்களின் கோபத்தை ஏற்படுத்தக்கூடும், இது தவிர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும், ஷெரட்டன் நகர்வில் ஈடுபட்டவர்களுடன் ஒப்பிட முடியாது என்று, பிஎச் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறியது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அன்வார் அவர்கள் இப்போது வாக்காளர்கள் வழங்கிய ஆணையை பிஎச்-க்குத் திருப்பி தர விரும்புவதாக கூறினார்.
“அவர்கள் நால்வரும், மக்கள் ஆணையைப் பிஎச்-க்குத் திருப்பித் தர விரும்பியதால், தாங்கள் (சட்டமன்ற உறுப்பினர்கள்) சுயேட்சையாக மாறியதாகப் பகிரங்கமாக கூறவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“உண்மையில், அவர்களில் இருவர் அம்னோவைச் சேர்ந்தவர்கள், பிஎச்-உடன் அவர்கள் இருந்ததில்லை. எனவே, மக்கள் ஆணையைப் பிஎச்-க்குத் திருப்பித் தர விரும்புவதால் அவர்கள் சுயேட்சையாக மாறினார்கள் என்ற கேள்வி எழவில்லை,” என்று ராம்கர்பால் கூறினார்.
ராம்கர்பாலின் கூற்றுப்படி, நூர் எஃபாண்டியும் நூர் ஹிஷாமும் ஷெரட்டன் நகர்வில் உடந்தையாக இல்லை என்று கூறுவது உண்மையல்ல, ஏனெனில் அவர்கள் இறுதியில் பிஎச்-உடன் இருந்து மாநில அரசாங்கத்தைப் பாதுகாக்கவில்லை.
“அவர்கள் கூறிய காரணம், அவர்கள் மாநில அரசாங்கத்தின் மீது ஏமாற்றம் அடைந்ததால் தான் ஆதரவைத் திரும்பப் பெற்றனர், பிஎச்-இடமிருந்து மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றியது மீதான வருத்தத்தால் அல்ல.
டிஏபி சட்டப் பணியகத்தின் தலைவரான அவர், பிஎச் அவர்களை ஏற்க முடியாது, அதே நேரத்தில் கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவதை அவர் ஆதரிப்பதாக சொன்னார்.
அக்டோபர் 21-ம் தேதி, கூட்டணி நோர் ஹிசாமை வேட்பாளராக நிறுத்தாது என்று பிஎச் கூறியது, மற்ற மூவரின் நியமனம் பற்றி விவாதிக்கவில்லை.
இருப்பினும், அன்வார் நேற்று மூவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.