பிஎன்-க்கு RM20,000, நஜிப்புக்கு RM4,000 – சுகாதார அமைச்சு தண்டம் விதித்தது

மலாக்காவில் இடம்பெற்ற, தேசியக் கூட்டணி (பிஎன்) தலைவர் முஹைதின் யாசின் மற்றும் முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் ரசாக் ஆகியோரின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு தண்டம் விதித்துள்ளது.

“நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் சமூக இடைவெளிக்கு இணங்கி இருப்பதை அமைப்பாளர்கள் உறுதி செய்யத் தவறியதால், இரண்டு தண்டங்களும் வழங்கப்பட்டன,” என்று சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று, நஜிப் மலாக்காவில் தனது இருப்பை ஒரு பார்வையாளராக மட்டுமே வைத்து கொண்டார், அவர் எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடவில்லை.

முஹைதினும் அதே நாளில், பிஎன் சின்னத்துடன் கூடிய சட்டையை அணிந்து ஒரு தள்ளுபடி விலை கடைக்குச் செல்ல மலாக்காவிற்கு வந்திருந்தார்.

முன்னதாக, ‘மொபைல்’ மேடையில் பேசியதற்காக, மலாக்கா பிகேஆர்-க்கு ரிம10,000 தண்டம் விதிக்கப்பட்டது.

இதற்கு முன், நஜிப் மற்றும் முஹைதின் மீது குற்றம் சாட்டப்படவில்லை என மூத்த எதிர்க்கட்சி அரசியல்வாதியான லிம் கிட் சியாங் கடுமையாக சாடினார்.

இதற்கிடையில், முஹைதின் மற்றும் நஜிப் சம்பந்தப்பட்ட கோவிட்-19 எஸ்ஓபி மீறல் தொடர்பாக, மலாக்கா தேர்தல் தொடர்பான பேரணிகள் வடிவில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.