டிஏபி மலாக்கா பிஆர்என் வேட்பாளர்களின் வரிசையை அறிவித்தது

மலாக்கா பிஆர்என் | மலாக்கா பிஆர்என்-கான வேட்பாளர் பட்டியலை டிஏபி இன்று அறிவித்துள்ளது.

வேட்பாளர்களில் முகமது டேனிஷ் ஜைனுடின் மற்றும் லெங் சாவ் யென் ஆகிய இரண்டு புதிய முகங்கள் உள்ளன.

கட்சியின் முன்னாள் உறுப்பினரான நோர்ஹிசாம் ஹசான் பக்தியின் பெங்காலான் பத்து மாநிலத் தொகுதியில் டேனிஷ் கடினமானதொரு பணியை எதிர்கொள்கிறார்.

முகமது டேனிஷ் ஜைனுடின் & லெங் சாவ் யென்

டிஏபி, அதன் மாநிலத் தலைவர் தேய் கோக் கியூவை ஆபத்தான தொகுதியான பெம்பானில் அமர்த்தியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில், மசீச மற்றும் பாஸ் வேட்பாளர்களுக்கு எதிரான மும்முனைப் போராட்டத்தில் 45.4 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று டிஏபி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

தே முந்தைய தொகுதியான பண்டார் ஹீலிர்-இல் – மலாக்காவில் பாதுகாப்பான டிஏபி தொகுதியாகக் கருதப்பட்டது – 84.5 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

புதிய முகமும், ஒரே ஒரு பெண் வேட்பாளருமான லெங், பண்டார் ஹீலிர் தொகுதியில் போட்டியிடுவார்.

கோலாலம்பூரில், கட்சியின் தலைமையகத்தில், செய்தியாளர் கூட்டத்தில் டிஏபியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் இந்த வரிசையை அறிவித்தார், இது இயங்கலையிலும் வெளியிடப்பட்டது.

37 வயதான லெங், 2014-ஆம் ஆண்டு முதல், கோத்தா மலாக்கா டிஏபி மற்றும் மலாக்கா டிஏபி ஆகியவற்றில் பல்வேறு பதவிகளை வகித்ததோடு, தே-இன் அரசியல் செயலாளராகவும் இருந்துள்.

மலாக்கா பிஆர்என்-கான டிஏபி வேட்பாளர்களின் முழுப் பட்டியல் பின்வருமாறு :-

  • N07 காடெக் – ஜி சாமிநாதன்
  • N15 பெங்காலான் பத்து – முஹம்மது டேனிஷ் ஜைனுதீன் (புதிய முகம்)
  • N 16 ஆயேர் கெரோ – கெர்க் சீ யீ
  • N19 கெசிடாங் – அலெக்ஸ் சீயா சூ சின்
  • N20 கோத்தா லக்சமானா – லோ சீ லியோங்
  • N21 டூயோங் – டாமியான் இயோ சென் லீ
  • N22 பண்டார் ஹீலிர் – லெங் சாவ் யென் (புதிய முகம்)
  • N24 பெம்பான் – தேய் கோக் கியூ
ஜி சாமிநாதன்

டாக்டர் வோங் ஃபோர்ட் பின் (பெம்பான்) மட்டுமே, பதவியில் உள்ள பரிந்துரைக்கப்படாத ஒருவர்.

இன்று முன்னதாக, மலாக்காவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், வோங் வேட்பாளர் பட்டியலில் இருந்து தான் நீக்கம் செய்யப்பட்டதாக வந்த வதந்திகள் பற்றி பேசினார்.

“நான் வேட்பாளராக இல்லாவிட்டாலும், பிஎச் ஓர் அரசாங்கமாக மாறுவதை உறுதிசெய்ய தொடர்ந்து பணியாற்றுவேன்.

“நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், மேலும் இளைய வேட்பாளர்களுக்கு வழிவிட தயாராக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பிஎச்-இல், வேட்பாளர் பட்டியலை அறிவித்த முதல் கட்சி டிஏபி ஆகும். மலாக்கா பிஆர்என் -க்கான வேட்புமனுத் தேதி நவம்பர் 8, வாக்களிக்கும் நாள் நவம்பர் 20 ஆகும்.