1எம்டிபி வழக்கு : ஸ்ரீ ராம் நீடிப்பார், மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி வழக்கில், கோபால் ஸ்ரீராமை அரசுத் தரப்புக் குழுவில் இருந்து நீக்க மீண்டும் தவறிவிட்டார்.

யாக்கோப் சாம் தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று நஜிப்பின் விண்ணப்பத்தை ஒருமனதாக நிராகரித்தது.

நீதிபதிகள் குழுவில், லீ ஹெங் சியோங் மற்றும் சே முகமட் ருஸிமா கஸாலி ஆகியோர் இருந்தனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 376 (3) பிரிவின்படி, மூத்த அரசு துணை வழக்கறிஞராக நியமிக்க ஸ்ரீராம் பொருத்தமான மற்றும் சரியான நபர் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

முன்னதாக, ஆகஸ்ட் 28-ம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்தார். அந்த விசாரணையில், ஸ்ரீராமை அரசு வழக்கறிஞராக கைவிடுவதில் நஜிப்பின் நீதித்துறை மறுஆய்வு மனு நிராகரிக்கப்பட்டது.