அமானா : மலாக்கா முதல்வர் வேட்பாளரைப் பிஎச் விரைவில் அறிவிக்கும்

அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் கருத்துப்படி, பக்காத்தான் ஹராப்பான் இந்த வாரம் மலாக்கா முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அமானா வேட்பாளர் அட்லி ஜஹாரியைத் தங்கள் முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று

அயேர் கெரோவில், ஒரு பிரத்யேக நேர்காணலின் போது, ​​”இது பற்றி விவாதிக்கப்பட்டது, நாங்கள் ஒரு புரிதலை அடைந்துள்ளோம். சரியான நேரத்தில் பெயர்களை அறிவிக்க காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

“வேட்பு மனு தாக்கல் முடிந்த ஓரிரு நாட்களில் தலைமை மன்றம் முடிவை அறிவிக்கும்,” என்றார்.

முன்னதாக, லிம், அம்னோவில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினரை ஏற்றுக்கொள்வதில் பிஎச் ஒரு “தவறு” செய்துள்ளதாகக் கூறினார், மேலும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் கூட்டணி இனி தவறு செய்யக்கூடாது என்றும் நினைவூட்டினார்.

2018 முதல் 2020 வரையில், பிஎச் தலைமையிலான மலாக்கா அரசாங்கத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய அட்லி, வேட்பாளராகக் கருதப்படுகிறார்.

மார்ச் 2020-இல், பிஎச் தலைமையிலான மாநில அரசாங்கம் கவிழ்க்கப்பட்டபோது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அட்லிக்குப் பதிலாக அம்னோவின் சுலைமான் எம்டி அலி நியமிக்கப்பட்டார்.

அட்லி அதிகாரப்பூர்வமாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டால், பதவியைப் பிடிப்பதற்கான இலட்சியங்களைக் கொண்ட பிறர், பிஎச் வெற்றி பெற்றாலோ அல்லது சட்டமன்றம் சார்புநிலைக்குத் தள்ளப்பட்டாலோ அவர்கள் ஒரு வாய்ப்பைத் தேடக்கூடும் என்று சில பிஎச் தலைவர்கள் கவலைப்படுகிறார்கள்.

அவர்களில் இட்ரிஸ் ஹரோனும் ஒருவர், அம்னோவில் இருந்து விலகி, பிகேஆர் சார்பில் அசஹானில் போட்டியிடவுள்ளார். இட்ரிஸ் 2013 முதல் 2018 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

மற்றொரு வேட்பாளர், 2018 பொதுத் தேர்தலில் இருந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவரும், பிகேஆர் உதவித் தலைவர் ஷம்சுல் இஸ்கந்தர் எம்டி அகின் ஆவார்.

அவர் ரிம்மில் தோற்கடிக்கப்பட்டது, அட்லி 2018-இல் முதல்வர் பதவிக்கு எளிதில் உயர வழி வகுத்தது.

இப்போது ஹங் துவா ஜெயாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஷம்சுல் பாயா ரும்புட்டில் களமிறக்கப்படுவார் என்ற ஊகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன.

அட்லி புக்கிட் கட்டிலில் தனது இருக்கையைப் பாதுகாத்துக் கொள்வார்.

நேற்று ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட அட்லியிடம் இது குறித்து கேட்டதற்கு, தேர்தலில் வெற்றி பெறுவதுதான் தனது முன்னுரிமை என்றார், முதல்வர் பதவி விவகாரத்தைத் தலைமை மன்றத்தில் ஒப்படைப்பதாக அவர் சொன்னார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. நவம்பர் 20-ஆம் தேதி, வாக்குப்பதிவுக்கு முன் நவம்பர் 19-ஆம் தேதி நள்ளிரவு வரை பிரச்சாரம் நடைபெறும்.