அன்னுவார் : அரசு அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வேட்பாளர் பிரச்சாரம்

மலாக்கா மாநிலத் தேர்தல் (பி.ஆர்.என்.) வேட்பாளர்களுக்கு, எதிர்க்கட்சிகள் உட்பட, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் பிரச்சாரம் செய்ய இடம் கொடுப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுவார் மூசா கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக புதிய வேட்பாளர்கள் புதிய விதிமுறையில் பிரச்சாரம் செய்ய எதிர்கொள்ளும் சிரமங்களை அரசாங்கம் புரிந்து கொண்டதே இதற்கு காரணம்.

“அரசியல் கட்சிகள் புதிய முறைகளை (பிரச்சாரம்) அறிமுகப்படுத்தினாலும், இன்னும் அவர்களுக்குத் தொலைக்காட்சி தளங்களில் தோன்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.” என்றார் அவர்

“எனவே, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான இடத்தை வழங்குவதற்காக மலேசிய வானொலி, தொலைக்காட்சி (ஆர்டிஎம்) உடன் நாங்கள் கலத்துரையாட உள்ளோம். ஓரிரு நாட்களில் இது குறித்து அறிவிப்பேன்,” என்றார்.

மலாக்கா பி.ஆர்.என். -இல் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்ற பக்காத்தான் ஹராப்பானின் கோரிக்கை குறித்து அன்னுவார் இவ்வாறு கருத்துரைத்தார்.

  • பெர்னாமா