600 உறுப்பினர்கள் பெர்சத்துவில் இருந்து வெளியேறினாலும் தேகூ அசையவில்லை

மலாக்கா பிஆர்என் | மலாக்காவில் கிட்டத்தட்ட 600 பெர்சத்து உறுப்பினர்களை இழந்த பிறகும், தேசியக் கூட்டணி (தேகூ) ‘ஆட்டம்’ காணவில்லை என்று அக்கூட்டணியின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் கூறினார்.

பாஸ் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார் கூறுகையில், பெங்காலான் பத்துவில் நடந்தது எதிரிகளின் உளவியல் போர்தான், ஏனெனில் மலாக்கா பிஆர்என் முடிவுக்கு வரவுள்ளது, மேலும் நவம்பர் 20 அன்று நடக்கவுள்ள போட்டியில் வெற்றி பெற அவர்களுக்கு இன்னும் “நேரம் உள்ளது” என்றார்.

இடைத்தேர்தல் (பிஆர்கே) அல்லது பொதுத் தேர்தல் (ஜிஇ) என எந்தத் தேர்தலாக இருந்தாலும், கட்சியை விட்டு வெளியேறும் இதுபோன்ற நபர்களை அறிவிக்கும் தந்திரோபாயம் ஒத்ததாக இருக்கும் என்று அஹ்மட் சம்சூரி கூறினார்.

மற்ற கட்சி உறுப்பினர்களும் அதே வழியில் செயல்படுவதை கண்டுபிடித்ததாக அந்தத் திரெங்கானு மந்திரி பெசார் கூறினார்.

“கட்சியில் நுழைவதும் வெளியேறுவதும் நாம் வழக்கமாகப் பார்த்துவரும் ஓர் உளவியல் போராகும். அதுமட்டுமின்றி அவர்கள் அம்னோ அல்லது அமானா போன்ற மற்ற கட்சிகளில் சேருவது பற்றிய அறிக்கைகள் எனக்கு வருகின்றன.

“இது பல தசாப்தங்களாக தேர்தல்களில் ஈடுபட்டு வருவதால், நாங்கள் கேள்விப்பட்ட ஒரு பொதுவான உளவியல் போர்தான், எனவே இதுபோன்ற விஷயத்தால் நாங்கள் சிறிதும் கவலைப்படவில்லை.

“வெற்றி பெறுவதற்காக (பிஆர்என்) நுழைந்தோம், போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற விரும்பினோம், எனவே முயற்சிப்போம்… இன்னும் நேரம் இருக்கிறது,” என்று அவர் இன்று கோலா திரெங்கானுவில், மாநிலச் சட்டமன்றத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று மலாக்காவில் 600 -க்கும் மேற்பட்ட பெர்சத்து உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாகக் கூறப்பட்டதை அடுத்து, தேகூ -இன் நம்பிக்கை குறித்து அஹ்மத் சம்சூரியிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதற்கிடையில், பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர், வான் சைபுல் வான் ஜான், சம்பந்தப்பட்ட 595 உறுப்பினர்களின் இடம்பெயர்வு, மலாக்கா வாக்காளர்களின் கவனத்தைத் திசைதிருப்ப அம்னோவின் அவநம்பிக்கையான முயற்சி என்று விவரித்தார்.

அம்னோவையும் பெர்சத்துவையும் சமரசம் செய்யத் தவறிய ‘அபாங் லோங்’ -ஆகச் செயல்படும் ஒரு கட்சி இருப்பதாக நேற்று அஹ்மட் சம்சூரியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இது கூறப்பட்டது என்றார்.

“இந்த விவகாரம் நேற்று வெளியான பெரிய பிரச்சினையிலிருந்து வாக்காளர்களின் கவனத்தைத் திசைதிருப்ப அம்னோவின் முயற்சி,” என்றார் அவர்.