பெரியவர்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முழு தடுப்பூசி பெற்றுள்ளனர்

நாட்டில், 95.6 விழுக்காடு அல்லது 22,379,626 பெரியவர்கள். நேற்றிரவு 11.59 நிலவரப்படி கோவிட்-19 தடுப்பூசி ஊசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்ஃநவ் (CovidNow) இணையதளத்தில், மலேசியச் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மொத்தம் 97.8 விழுக்காடு அல்லது 22,906,258 பெரியவர்கள் குறைந்தது ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், 12 முதல் 17 வயதுடைய மக்கள்தொகையில் 87.4 விழுக்காடு அல்லது 2,751,092 பேர் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவைப் பெற்ற நிலையில், 82.1 விழுக்காடு அல்லது 2,584,612 இளையர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்.

16,848 முழு மருந்தளவு ஊசிகளை உள்ளடக்கிய 105,103 மருந்தளவு தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டதாகவும், 6,549 பேர் முதல் மருந்தளவையும், 81,706 பேர் ஊட்ட மருந்தளவு ஊசிகளையும் பெற்றனர். இது தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கான தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 51,842,386 -ஆகக் கொண்டு வந்துள்ளது.

ஆக, மொத்த ஊட்ட மருந்தளவுகள் இப்போது 1,407,762 ஆக உள்ளது.

  • பெர்னாமா