புக்கிட் குளுகோர் பிகேஆர் தொகுதி தலைவர் லிம் பூ சாங், அதிலிருந்து விலகி மீண்டும் கெராக்கான் கட்சிக்கே செல்ல முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே 1984-இலிருந்து 1999-வரை கெராக்கானில்தான் இருந்தார்.
அவர் தம் பதவி விலகல் கடித்தத்தைக் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிகேஆரின் சீரமைப்புத் திட்டத்தால் கவரப்பட்டு அக்கட்சியில் சேர்ந்ததாகவும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு அது தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் லிம் (வலம்) கூறினார்.
“உறுப்பினர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து மனம் தாங்காமல்தான் விலகிச் செல்கிறேன்.”
பினாங்கு முனிசிபல் மன்ற கவுன்சிலர் பதவியிலிருந்தும் விலகுவதாக லிம் கூறினார். பிகேஆர்தான் அவரை அப்பதவிக்கு நியமனம் செய்தது.
முனிசிபல் மன்றம் சுயேச்சையாக செயல்படவில்லை என்றும் முதலமைச்சர் லிம் குவான் எங் அதன் முடிவுகள் பலவற்றில் தலையிட்டது உண்டு என்றும் லிம் சொன்னார்.
“முன்பெல்லாம் மன்றத்தில் தலையீடுகள் இருந்ததில்லை. இந்த லட்சணத்தில் தகுதியும் பொறுப்புடைமையும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரசு என்று சொல்லிக்கொள்கிறார்கள்”, என்றாரவர்.