‘நியாயமற்ற பிரச்சார விதிகள், வேட்பாளர்கள் தொகுதி எல்லைகளை கடக்க முடியாது’

வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குள் மட்டும் பிரச்சாரம் செய்வதை கட்டுப்படுத்தும் விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை (EC) டிஏபி வலியுறுத்தியுள்ளது.

சிபு எம்பி ஆஸ்கார் லிங் கூறுகையில், சிபு தொகுதியில் பல மாநிலத் தொகுதிகள் இருப்பதால், அங்கு பல தொகுதிகளின் வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

“உதாரணமாக, எங்கள் மார்க்கெட் பவாங் அசான் மாநிலத் தொகுதியில் உள்ளது, சிபுவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்த சூழலில் வேட்பாளர்கள் அங்கு பிரச்சாரம் செய்வது எப்படி நியாயமற்றதாக அமையும்.

“இந்த விதியை ரத்து செய்ய அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று லிங் கூறினார்.

வேட்பாளர்கள் ஒன்றாக பிரச்சாரம் செய்வதைத் தடுப்பதால், இந்த விதி, செலவீணங்களை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

NSC விதிகளின்படி, ஒரு கட்சி 15 கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி பெறலாம்.

இருப்பினும், ஒரே நேரத்தில் ஐந்து பேர் மட்டுமே தொகுதியில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் மோசமான இணையதள இணைப்புகளும் தேர்தல் பேரணிகள் (செராமா) மீதான தடையும் வேட்பாளர்களுக்கு சிரமமான சூழலை ஏற்படுத்தியுள்ளன.