புலி அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிளந்தான் ஒராங் அஸ்லி பள்ளி மூடப்பட்டுள்ளது
மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டுப்புலிகள் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் கிளந்தான், குவா முசாங்கில் உள்ள இடைநிலைப் பள்ளி (எஸ்.கே) பிஹாய் மூடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) குவா முசாங்கின் போஸ் பிஹாய்க்கு அருகிலுள்ள கம்போங் சாவ் என்ற இடத்தில் 59 வயதான ஒராங் அஸ்லி கிராமவாசி ஒருவர் புலியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
வனவிலங்குத்துறை சம்பவத்திற்குப் பிறகு புலியை மூன்று மணி நேரம் பின்தொடர்ந்து, அந்த உயிரினத்தை சுட்டுக் கொன்றது.
“புலி அச்சுறுத்தலைத் தொடர்ந்து பள்ளி மீண்டும் திறப்பது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குவா முசாங் கல்வித் துறை தெரிவித்துள்ளது. கிளந்தான் வனவிலங்குத் துறை, பாதுகாப்பு உத்தரவாதம் அளித்த பின்னரே நேருக்கு நேர் பள்ளி அமர்வு மீண்டும் தொடங்கப்படும்”.