கோவிட்-19 (ஜனவரி 10): 2,641 நேர்வுகள்

கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் இன்று 2,641 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்துள்ளது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,788,860 ஆக உள்ளது.

டிசம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு, 21 நாட்களில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மிகக் குறைவு.

தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீதம் குறைந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட 4 புதிய கிளஸ்டர்கள் உட்பட, இன்றுவரை, 169 கோவிட்-19 கிளஸ்டர்கள் இன்னும் செயலில் உள்ளன.

ஒரு வாரத்திற்கு முன்பு செயல்பாட்டில் இருந்த 206 கிளஸ்டர்களில் இருந்து தற்போதுள்ள கிளஸ்டர்கள் 18.0 சதவீதம் குறைந்துள்ளது.

2,888 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (ஜனவரி 9) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (770)

ஜோகூர் (326)

கோலாலம்பூர் (272)

கெடா (223)

சபா (198)

கிளந்தான் (195)

பினாங்கு (186)

நெகிரி செம்பிலான் (158)

பகாங் (148)

மலாக்கா (139)

பேராக் (121)

தெரெங்கானு

சரவாக் (22)

லாபுவான் (18)

புத்ராஜெயா (14)

பெர்லிஸ் (8)